ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

7 படங்களில் ஐந்து சூப்பர் ஹிட்.. கேடு கெட்ட பழக்கத்தால் கேரியரை தொலைத்த மனிஷா கொய்ராலா!

நேபாளத்தில் பிறந்த நடிகை மனிஷா கொய்ராலா, தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 90களில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த மனிஷா கொய்ராலா 7 சூப்பர் ஹிட் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு இருந்த மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தால் தன்னுடைய கெரியரையே நாசமாக்கி கொண்டார். அதுமட்டுமல்ல புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வந்த இவர், அதிலிருந்து முழுவதுமாக மீண்டுள்ளார். இப்போது மனிஷா கொய்ராலா தமிழில் நடித்த 7 நல்ல படங்களை பற்றி பார்ப்போம்.

பம்பாய்: 1992 மற்றும் 1993ல் பம்பாயில் நடைபெற்ற கலவரங்களில் நடந்த உண்மை சம்பவங்களால் பின்னப்பட்ட படம் தான் பம்பாய். 1995 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருப்பார். இதில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சைலா பானு என்ற கேரக்டரில் தத்ரூபமாக தன்னுடைய காதலை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இதில் அரவிந்த்சாமி மற்றும் மனிஷா கொய்ராலா இருவரின் கெமிஸ்ட்ரி, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தியன்: ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருப்பார். இதில் கமலுடன் இவருடைய கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். இதில் மனிஷா கொய்ராலா கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக உடை அணிந்து இளசுகளை திணறடித்திருப்பார். படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Also Read: 50 வயதில் நீச்சல் உடையில் அலறவிடும் மனிஷா கொய்ராலா.. பற்றி எரியும் இணையதளம்

முதல்வன்: 1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருப்பார். இதில் இவர் படம் முழுவதும் தாவணி, பாவாடை சட்டையில் அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே காட்சியளிப்பார். அது மட்டுமல்ல வெகுளித்தனமான பேச்சு மற்றும் நடிப்பின் மூலம் இந்தப் படத்தில், ஒரு நாள் முதல்வரை மட்டுமல்ல படத்தை பார்ப்போரையும் கட்டிப் போட்டார். படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

ஆளவந்தான்: 2001 ஆம் ஆண்டு கமலஹாசன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மனிஷா கொய்ராலாவின் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்தது.

பாபா: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருப்பார். இதில் இவர் சாமுண்டீஸ்வரி என்ற கேரக்டரில் ரஜினியை துரத்தி துரத்தி காதலிக்கும் குறும்புத்தனம் கொண்ட பெண்ணாக நடித்திருப்பார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் பிடித்தமான படங்களின் லிஸ்டில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. மேலும் இந்த படத்தை மறு ஆக்கம் செய்து கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read: உப்புக்கருவாடாக மாறிய மனிஷா கொய்ராலா.. புகைப்படத்தை பார்த்து தெறித்து ஓடிய ரசிகர்கள்!

மும்பை எக்ஸ்பிரஸ்: 2005 ஆம் ஆண்டு கமலஹாசன் கதை எழுதி, தயாரித்த மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் கமலஹாசன் உடன் மனிஷா கொய்ராலா இணைந்து நடித்திருப்பார். இதில் இவர்களுடன் நாசர், பசுபதி, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் மனிஷா கொய்ராலா, அகல்யா என்ற கதாபாத்திரத்தில் ஹோம்லி லுக்கில் காட்சியளித்திருப்பார். இவருடைய நடிப்பு இந்த படத்தில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்கவில்லை.

மாப்பிள்ளை: 2011 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படம் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் தனுஷின் மாமியாராக மனிஷா கொய்ராலா நடித்திருப்பார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இவர் ரீ என்ட்ரி கொடுத்ததால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இதில் வில்லியாக ஓவர் திமிரு காட்டும் ராஜேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்த மனிஷா கொய்ராலாவின் நடிப்பு, இதுவரை இல்லாத அளவிற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

Also Read: கமலஹாசனை காலை வாரிவிட்டு 5 தோல்வி படங்கள்.. தடமே தெரியாமல் தியேட்டரைவிட்டு தெறித்து ஓடிய மும்பை எக்ஸ்பிரஸ்

இவ்வாறு இந்த 7 படங்களில் பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் தவிர மற்ற படங்கள் ஓரளவு ஹிட்டாக அமைந்தது. தொடக்கத்தில் மனிஷா கொய்ராலா படங்களில் இடம்பெறும் கிளாமர் காட்சிகளில் நடிக்க வெட்கப்பட்டதால், அந்த கூச்சத்தை போக்க வேண்டும் என்பதற்காக மிதமாக மது அருந்தி நடித்திருக்கிறார். அதன் பிறகு காலப்போக்கில் மது அருந்தினால் மட்டுமே நடிக்க முடியும் என்கின்ற அளவுக்கு அடிமையானார். அத்துடன் புகைப்பிடிக்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டது. இப்படிப்பட்ட கேடுகெட்ட பழக்கத்தினால் தான் மனிஷா கொய்ராலாவின் சினிமா கெரியரே நாசமானது.

- Advertisement -

Trending News