ஆண்டவரே களத்தில் இறங்கி தீர்த்து வைத்த பஞ்சாயத்து.. சிம்புக்காக முட்டி மோதும் கமல்

ஒரு காலத்தில் சிம்புவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும் யோசிப்பார்கள். அந்த அளவுக்கு அவர் மீது சர்ச்சை நாயகன் என்ற ஒரு பெயர் ஒட்டிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அப்படி கிடையாது. உடல் எடையை குறைத்துள்ள சிம்பு தற்போது அதிரடியாக ஆட்டத்தில் இறங்கி இருக்கிறார்.

அதனாலேயே பல தயாரிப்பாளர்களும் அவரை நீ, நான் என போட்டி கொண்டு கமிட் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் மனுஷன் இப்போது உலகநாயகனிடம் சிக்கி விட்டார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருக்கும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படம் பிரம்மாண்டமாக உருவாக இருப்பது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் சிம்பு அடுத்த நிலைக்கு செல்வார் என்று கூட ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. இதை சிம்புவின் ரசிகர்கள் உட்பட அனைவரும் கொண்டாடி வந்தாலும் ஒரே ஒருவர் மட்டும் கடும் அப்செட்டில் இருக்கிறார்.

அதாவது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற ஹிட் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அடுத்ததாக அவரை வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டு இருந்தார். சிம்புவும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் இப்போது கமல் கூட்டணியில் இணைந்திருப்பதால் ஐசரி கணேசால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அவர் சிம்புவிடம் இது குறித்து நாசுக்காக கேட்டிருக்கிறார். எங்கே இது ஒரு பஞ்சாயத்தாக மாறிவிடுமோ என பயந்து போன சிம்பு தற்போது ஆண்டவரை வைத்தே இதை சுமூகமாக பேசி முடித்திருக்கிறார். கமலும் இந்த பிரச்சனையை சரியான முறையில் கையாண்டு ஐசரி கணேசிடம் பேசி தீர்த்து வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சிம்புவுக்காக உலக நாயகனே களத்தில் இறங்கி பஞ்சாயத்தை முடித்திருக்கிறார். இதேபோன்று மாநாடு படத்திற்கு பிரச்சனை வந்த போது கூட சிம்பு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை வைத்து தான் சரி செய்தாராம். இப்படி தன்னை தேடி வரும் பல பிரச்சனைகளை அவர் அசால்ட்டாக சரி செய்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →