சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறி தற்போது டாப் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் போன்ற படங்களின் மூலம் 100 கோடி வசூலை வாரி குவித்தார். அதன் பிறகு இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இதனால் மறுபடியும் ஹிட் கொடுக்க வேண்டும் என அவருடைய அயலான் மற்றும் மாவீரன் போன்ற இரண்டு படங்களையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய ஆர்வத்துடன் காத்திருக்கிறார். இந்நிலையில் அயலான் படத்தை வரும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய முடிவெடுத்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
அதற்கு முன்பாகவே ஆகஸ்ட் 11ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் இப்போது ரிலீஸ் தேதி அறிவித்த உடனேயே ஐடி ரைடில் சிக்கிவிட்டது. இதனால் சிவகார்த்திகேயன் பெரும் கலக்கத்துடன் இருக்கிறார்.
ஏனென்றால் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்கொயர் ஃபண்டில் தற்போது ஐடி ரைட் நடந்து வருகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் தான் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தையும் தயாரித்துள்ளது. ஆகையால் இந்த ரெய்டு நடந்து வரும் சூழலில் மாவீரன் படத்தை பற்றி துப்பு கிடைத்தால் கண்டிப்பாக படத்தை வெளியிட விட மாட்டார்கள்.
இதுவரை அப்படி ஒரு செய்தி வரவில்லை இருந்தாலும் ஜி ஸ்கொயர் ஃபண்டில் எடுத்த படம் என்பதால் கண்டிப்பாக பயத்துடன் இருந்து வருகிறார்கள் படக்குழு. முக்கியமாக சிவகார்த்திகேயன் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த படத்தை வெற்றி பெற வைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்தார்.
ஏற்கனவே படப்பிடிப்பு நடக்கும் பொழுது பலவிதமான பிரச்சனைகள் நடந்து சமாளித்து படத்தை முடித்துவிட்டார். தற்போது இந்த பிரச்சனை வந்திருக்கிறது. இருப்பினும் படக்குழுவினரும் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்து ஆகஸ்ட் 11ம் தேதியே மாவீரன் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.