தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி நாடோடிகள், நிமிர்ந்து நில் போன்ற படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்தவர் தான் சமுத்திரக்கனி. இதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் சில படங்களில் குணச்சித்திரமாக நடித்து வந்த இவர் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி விட்டார். அப்படி இவர் நடித்து இவரை தூக்கி விட்டு அழகு பார்த்த ஐந்து படங்களை பார்க்கலாம். அதிலும் ரெண்டு முன்னணி ஹீரோவுக்கு அப்பாவாகவும் நடித்திருக்கிறார்.
ரஜினி முருகன்: இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு ரஜினி முருகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் சமுத்திரக்கனி வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனாலும் இந்த வில்லன் ரொம்பவே கொடுமையான வில்லனாகவும் இல்லாமல் கொஞ்சம் காமெடி பீஸ் ஆகவும் நடித்திருப்பார். இதில் இவருடைய நடிப்பு சற்று வித்தியாசமாகவே இருக்கும். இதில் “ஏழரை” மூக்கன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
Also read: அப்பா மகன் பிரண்ட்ஷிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.. சமுத்திரகனி தம்பி ராமையா பிச்சு உதறிய ஹிட் படம்
சாட்டை: மு. அன்பழகன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு சாட்டை திரைப்படம் வெளிவந்தது. இதில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன் மற்றும் பாண்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சமுத்திரக்கனி அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியராக நடித்திருப்பார். கண்டிப்பு மட்டுமே காட்டும் ஆசிரியர்களுக்கு மத்தியில் மாணவர்களுக்கு ஏற்றபடி பாடங்களை சொல்லி அவர்களை முன்னுக்கு வர வைக்கலாம் என்று ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்டும் விதமாக தயாளன் கேரக்டரில் நடித்தார். இதில் இவருடைய நடிப்புக்கு விமர்சன ரீதியாக பாராட்டு கிடைத்தது.
விசாரணை: வெற்றிமாறன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு விசாரணை திரைப்படம் வெளிவந்தது. இதில் அட்டகத்தி தினேஷ், முருகதாஸ், சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் சமுத்திரக்கனி முத்துவேல் என்ற கேரக்டரில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். இப்படத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருது இவருக்கு கிடைத்தது. அத்துடன் இவருடைய நடிப்புக்கும் இந்த படத்தில் இருக்கும் கதைக்கும் அதிக அளவில் விமர்சன ரீதியாக பாராட்டு கிடைத்தது.
Also read: சமுத்திரக்கனி இயக்கி படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்.. ரூட்டை மாற்றி அக்கட தேசம் வரை சென்ற ரகசியம்
வேலையில்லா பட்டதாரி: இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் தனுஷ், அமலாபால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சமுத்திரக்கனி, தனுஷுக்கு அப்பா கேரக்டரில் நடித்தார். இதுக்கு முன்னதாக ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வந்த இவர் தனுஷ்க்கு அப்பா கேரக்டர் என்று சொன்னதும் கதைக்காக நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் இப்படத்தை பார்க்கும் போது சமுத்திரக்கனி நடிப்பு மிகவும் யதார்த்தமாக உண்மையில் தனுஷ்க்கு அப்பாவாகவே நடித்துக் காட்டி இருப்பார். இவருடைய நடிப்புக்கு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது.
நம்ம வீட்டு பிள்ளை: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அணு இம்மானுவேல், சூரி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சமுத்திரக்கனி நடித்தார். அதிலும் பிரண்ட்ஷிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நல்ல நண்பராகவும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
Also read: யார் NO-1 பிரச்சினை உங்களால தான்.. நீங்க வாயை மூடிட்டா போதும் பயங்கர காட்டத்தில் சமுத்திரக்கனி.!