வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இனி சந்தானத்துடன் நடிக்கவே மாட்டேன் என சொன்ன கார்த்தி.. மீண்டும் சேராமல் போனதன் பின்னணி காரணம்

நடிகர் கார்த்தி சமீபத்தில் நடித்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் விக்ரம், ஜெயம் ரவி என மல்டி ஸ்டார்களுடன் உருவாகியிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக படக்குழு இந்தியா முழுவதும் விசிட் அடித்து வருகிறது. அந்த நிகழ்ச்சியை பார்த்தாலே கார்த்தி சக நடிகர்களுடன் நட்புடனும், எளிமையாகவும் பழகுகிறார் என்பது தெரிகிறது.

இப்படி தன்னுடைய சக போட்டியாளர்களான முன்னணி ஹீரோக்கள் விக்ரம், ஜெயம் ரவியுடன் நட்புடன் பழகும் கார்த்தி, அப்போது காமெடியனாக இருந்த சந்தானத்துடன் நடிக்கவே மாட்டேன் என அடம்பிடித்தார் என்றால் யாராலும் நம்ப முடியாது. ஆனால் கார்த்தி அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதுவும் படப்பிடிப்பின் போது பாதியிலேயே சொல்லியிருக்கிறார்.

Also Read:சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பல கோடி நஷ்டம்.. 6 வருட போராட்டம் தனுஷ், கார்த்தியை சமாளிப்பாரா.?

சந்தானம் இன்று ஹீரோவாக ஜொலிக்க முடியாமல் பல படங்களில் திணறிக் கொண்டிருந்தாலும், சில வருடங்களுக்கு முன்பு வரை காமெடியில் கலக்கி கொண்டிருந்தார். இவருக்காகவே ஓடிய பல படங்களும் உண்டு. ஹீரோக்களுடன் நல்ல கெமிஸ்ட்ரியும் இவருக்கு இருந்ததால் காமெடி காட்சிகள் ரொம்பவும் ரசிக்கும் விதமாக அமைந்தன.

சந்தானத்தின் நகைச்சுவை திறமையை தமிழ் சினிமா ரசிகர்களிடம் மொத்தமாக கொண்டு சேர்த்தது இயக்குனர் ராஜேஷ் தான். இவர்கள் கூட்டணியில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. அந்த வரிசையில் அமைந்த படம் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படமும்.

Also Read:பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களும் எடுக்க எவ்வளவு நாளாச்சு தெரியுமா?. ப்ரோமோஷனலில் போட்டு உடைத்த வந்தியத்தேவன்

கார்த்தியும், சந்தானமும் ஏற்கனவே சிறுத்தை படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்த படத்தில் இவர்களது கூட்டணி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சந்தானம் எப்போதுமே காட்சிகளில் ஹீரோக்களை பங்கமாய் கலாய்க்க கூடிய பேர்வழி. அதிலும் இந்த படத்தில் கார்த்தியை வச்சு செய்திருப்பார். இது கார்த்திக்கு மிகப்பெரிய கோபத்தை கிளப்பியிருக்கிறது.

இதனால் கார்த்தி, இயக்குனர் ராஜேஷிடம் சந்தானத்தை மாற்றுங்கள். ஒரு ஹீரோவாக பார்க்காமல் அவர் இஷ்டத்துக்கு பேசி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கு அவமானமாக இருக்கிறது.தயவுசெய்து மாற்றுங்கள் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு ராஜேஷ் கண்டிப்பாக முடியாது என்று கூறினார். இதனால் வேறு வழியில்லாமல் கார்த்தி அந்த படத்தில் நடித்து முடித்தார். அந்த படத்தில் இருந்து இன்று முதல் சந்தானத்துடன் அவர் சேர்ந்து நடிக்கவில்லை. சந்தானமும் கதாநாயகனாக மாறியதால் கார்த்திக்கும், இவருக்கும் சம்பந்தம் இல்லாமல் போனது.

Also Read:பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் கார்த்திக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா!. குந்தவையை விட கம்மியா இருக்குதே

 

Trending News