நெகட்டிவ் ரோலில் பட்டையை கிளப்பிய 5 ஹீரோயின்கள்.. சொர்ணாக்கவையே தூக்கி சாப்பிட்ட திமிரு ஈஸ்வரி

பொதுவாக படங்களில் நடிக்கும் ஹீரோக்களை அடுத்து பெரிதாக பேசப்படுபவர்கள் தான் ஹீரோயின்கள். ஹீரோவுக்கு ஜோடியாக வரும் இவர்கள் அழகான, சாதுவான மற்றும் நல்ல உடல் அமைப்பு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

மேலும் இத்தகைய குணமுடைய இவர்களை படங்களில் வில்லியாகவும் காண்பித்து இருப்பார்கள் இயக்குனர்கள். அவ்வாறு படங்களில் அடங்காப்பிடாரியாய் திரிந்த ஐந்து ஹீரோயின்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read:ஏலேய் இசுக்கு, நல்லா இருக்கியாலே.. தொடையை காட்டி அதிரடியாய் வந்த விஷால் அண்ணி ஸ்ரேயா ரெட்டி

ரம்யா கிருஷ்ணன்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சௌந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் படம் தான் படையப்பா. இதில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. தான் விரும்பிய வாழ்க்கை கிடைக்காததால் பழிவாங்கும் இவரின் நடை உடை பாவனை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆண்களையே அடக்கி ஆளும் வல்லமை கொண்டவராக இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் தோற்றம் கொண்டிருப்பார்.

தமன்னா: 2006ல் வெளிவந்த கேடி படத்தில் பிரியங்கா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தமன்னா. உடன் பயில்வோர் மீது மோதலில் ஏற்படும் காதலை உணராத ஹீரோவை பழிவாங்குவது போன்று நடித்திருப்பார். மேலும் தன் அழகுக்கு உரிய கதாபாத்திரமாக இல்லாவிட்டாலும் அதை ஏற்று நடித்த பெருமை இவரையே சேரும்.
இவரின் ரசிகர்களே இவரை எதிர்க்கும் விதமாக இக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.

Also Read:நட்பை வைத்து நாங்களும் கெத்து தான் என நிரூபித்த 5 படங்கள்.. தோழிக்காக கொல கேசில் சிக்கிய ஜோதிகா

ஸ்ரேயா ரெட்டி: 2006ல் வெளிவந்த திமிரு படத்தில் வில்லியாக நடித்திருப்பார் ஸ்ரேயா ரெட்டி. ஈஸ்வரி கதாபாத்திரத்தில் வரும் இவர் தன்னை வேண்டாம் என்று சொன்ன காரணத்தற்காக ஹீரோவை பழிவாங்கும் படலத்தில் ஈடுபடுவார். பெண்ணுக்கு உரிய நளினம் இல்லாமல் அடாவடியாக வரும் இவரை கண்டு பயப்படாதவர்களே இருக்க முடியாது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் சொர்ணாக்காவை மிஞ்சும் அளவிற்கு இவரின் நடிப்பு இடம் பெற்றிருக்கும்.

ஜோதிகா: 2007ல் வந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நெகட்டிவ் விமர்சனத்தில் வருவார் ஜோதிகா. தன் சாதுரியமான நடிப்பால் நல்லவரைப் போல நடித்து ஆண்களை மயக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரா இப்படி நடித்திருக்கிறார் என்று வியக்கும் அளவிற்கு நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். ஆனாலும் இக்கதாபாத்திரம் ரசிகர்களிடையே இவருக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்யை பெற்று தந்தது.

Also Read:ரீமா சென் கணவரை பார்த்திருக்கிறீர்களா.? இணையத்தில் வட்டமிடும் குடும்ப புகைப்படம்

ரீமா சென்: 2006ல் வெளிவந்த வல்லவன் படத்தில் சிம்புவின் ஸ்கூல் பிரண்டாக நடித்திருப்பார் ரீமாசென். மேலும் சிம்பு மீது கொண்ட அதிக காதலால் இப்படத்தில் இவரை படாத பாடு படித்திருப்பார். காதலில் தோல்வி கொண்ட ரீமாசென் சிம்புவை பழி வாங்குவது போன்று கதை அமைந்திருக்கும். இறுதியில் இவர் சைக்கோ லெவலுக்கு மாறி சிம்புவை துன்புறுத்திருப்பார். இவருக்கு ரொமான்ஸ் மட்டுமே வரும் என்று நம்பியவர்களுக்கு இவரின் நடிப்பு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.