செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

16 வருட சினிமா வாழ்க்கையில் வெங்கட் பிரபு கொடுத்த 5 நச் படங்கள்.. சூப்பர் ஹிட் அடித்த சென்னை 28

இயக்குனர் வெங்கட் பிரபு, கங்கை அமரன், இளையராஜா என இசை வாரிசாக தமிழ் சினிமா உலகிற்கு அறியப்பட்டிருந்தாலும் இவர் முதன் முதலில் சினிமாவுக்குள் ஹீரோவாகத்தான் அறிமுகமானார். ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த வெங்கட் பிரபு அதன் பின்னர் தன்னுடைய சினிமா பாதையை இயக்குனராக மாற்றிக் கொண்டார். வெங்கட் பிரபுவின் படம் என்றாலே சிரிப்புக்கும், நட்புக்கும் பஞ்சம் இருக்காது என அனைவரும் அறிந்த ஒன்றுதான். 16 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் இந்த ஐந்து படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

சென்னை 28: இப்படியும் ஒரு படம் எடுத்து அதில் வெற்றியும் காணலாம் என வெங்கட் பிரபு தமிழ் சினிமாவிற்கு சொன்ன படம் தான் சென்னை 28. முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களோடு, கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி நடக்கும் எதார்த்தங்களையும், உணர்வுகளையும் எடுத்து சொல்லி இருந்தார் வெங்கட் பிரபு. இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய ஹிட் அடித்து அவருக்கு ஒரு அடையாளத்தையும் வாங்கி கொடுத்தது.

Also Read:எனக்கு இதுமாதிரி நடிக்க பிடிக்காது.. இயக்குனர்களுக்காக ‘மிர்ச்சி’ சிவா நடித்த படங்கள்

சரோஜா: சென்னை 28க்கு பிறகு அதே வெற்றி கூட்டணியை வைத்து வெங்கட் பிரபு 2008இல் இயக்கிய திரைப்படம் தான் சரோஜா. எதிர்பாராத விதமாக சந்திக்கும் நண்பர்கள் கிரிக்கெட்டை நேரில் பார்க்க ஸ்டேடியத்திற்கு செல்லும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை ரொம்பவும் காமெடியாக சொல்லி இருப்பார் இயக்குனர்.

கோவா: நட்பு, காதல், ஏமாற்றம், சந்தோஷம் என அத்தனை உணர்வுகளையும் ஒரே கதையில் காட்டிய திரைப்படம் தான் கோவா. கிராமத்தைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கோவாவிற்கு செல்லும் பொழுது அவர்களுக்கு நடக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் தான் இந்தப் படத்தின் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகளின் மூலமே அத்தனை உணர்வுகளையும் சொல்லி இருப்பார் வெங்கட் பிரபு.

Also Read:வெங்கட் பிரபு போட்டுள்ள அதிர்ச்சியான டுவிட்.. பயில்வானுக்கு அப்படி என்னதான் ஆச்சு

மங்காத்தா: இளம் ஹீரோக்கள், புதுமுக ஹீரோக்களை வைத்து நட்பு, பார்ட்டி என கதை சொல்லிக் கொண்டிருந்த வெங்கட் பிரபுவுக்கு அடித்த ஜாக்பாட் தான் மங்காத்தா. வாலி திரைப்படத்திற்குப் பிறகு அஜித்தின் நெகட்டிவ் ஷேடை மீண்டும் ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்திய படம் இது. முழுக்க முழுக்க வெங்கட் பிரபுவையும், படத்தின் கதையையும் நம்பிய நடிகர் அஜித்குமாரை இந்த படம் மிகப்பெரிய ஹிட் நாயகனாக மாற்றியது.

மாநாடு: மாநாடு திரைப்படம் கிட்டத்தட்ட வெங்கட் பிரபு மற்றும் சிம்பு இருவருக்குமே கம் பேக் என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கு ஒரு மிகப்பெரிய ஹிட் படம் அமைந்தது. அதேபோல் இந்த முறை ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த சிம்புவுக்கும் படம் மறு வாழ்க்கை கொடுத்தது. மேலும் இந்தப் படத்தில் வழக்கம்போல் எஸ் ஜே சூர்யா தன்னுடைய சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read:தமிழில் கல்லா கட்டுமா? வெங்கட் பிரபு, நாக சைத்தன்யா கூட்டணி.. கஸ்டடி டீசர் எப்படி இருக்கு.?

- Advertisement -spot_img

Trending News