செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இயக்குனரை ஏமாற்றிய சிம்புவின் குடும்பம்.. நடுரோட்டுக்கு வந்த டைரக்டர்

நடிகர் சிம்புவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மார்க்கெட் இல்லாமல் இருந்தது. ஆனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடித்த பிறகு அவரது மார்க்கெட் உச்சத்தில் சென்றது. இதைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களும் ஹிட்டு அடித்தது.

இந்நிலையில் சிம்புவால் ஒரு இயக்குனர் மிகுந்த மன உளைச்சலில் ஒரு இயக்குனர் இருந்துள்ளார். ஆரம்பத்தில் சிம்புவின் கேரியர் படுத்து கிடந்த நிலையில் அவரை தூக்கி விட்ட படம் என்றால் அது மன்மதன் தான். இந்த படத்தை முருகன் இயக்கி இருந்தார். ஆனால் மன்மதன் சிம்புவுக்கான கதை இல்லையாம்.

Also Read : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 4 படங்கள்.. அதகளம் செய்யும் சிம்புவின் பத்து தல

முருகன் அஜித்தின் நீ வருவாயா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்துள்ளார். இப்போதைய அஜித்திடம் மன்மதன் படத்தின் கதையை கூறி இருக்கிறார். ஏற்கனவே ஹீரோ, வில்லன் என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் வாலி படத்தில் அஜித் மிரட்டி இருப்பார்.

ஆகையால் மன்மதன் படத்திற்கும் அஜித் பொருந்துவார் என முருகன் கதையை கூறியுள்ளார். ஆனால் அப்போது அஜித் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் பிறகு நாம் படம் பண்ணலாம் என்று கூறிவிட்டாராம். எனவே சிம்புவிடம் முருகன் இந்த கதையை கூறியிருக்கிறார்.

Also Read : திரிஷாவுக்கு பொருத்தமான ஜோடியாக நடித்த 5 நடிகர்கள்.. நிஜத்திலும் வளைத்து போட நினைத்த சிம்பு

அந்த கதை சிம்புக்கு பிடித்த போக பண்ணலாம் என்று கூறியுள்ளார். ஆனால் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய இடங்களில் தனது மகன் சிம்புவின் பெயர் இடம்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டாராம். இப்போது படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இதற்கெல்லாம் அவர் சம்மதித்து உள்ளார்.

அந்த படம் சிம்புவின் சினிமா வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்தாலும் இயக்குனருக்கு இதனால் எந்த பெயரும் கிடைக்கவில்லை. சிம்புக்கு மட்டுமே மொத்த கிரீடிட்டும் கிடைத்தது. இதனால் இயக்குனர் சிம்பு குடும்பத்தின் மீது வழக்கும் தொடர் இருந்தார். இப்போது என்ன ஆனார் என்பது கூட தெரியவில்லை.

Also Read : மேடையில் கேட்கப்பட்ட வில்லங்கமான கேள்வி.. கழுவுற மீனில் நழுவுற மீனாக எஸ்கேப் ஆன சிம்பு

Trending News