வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

ஹீரோவை மிஞ்சிய 6 வில்லன் கதாபாத்திரம்.. அஜித்திற்கு பயத்தை காட்டிய விக்டர்

ஒரு சில படங்களில் ஹீரோவை காட்டிலும் வில்லன்களுக்கே முக்கிய கதாபாத்திரம் அமைந்துவிடுகிறது. மேலும் இவர்களின் கெட்டப்புக்கும் மற்றும் நடிப்பிற்கும் இயக்குனர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அதிலும் தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு டப் கொடுக்கும் வில்லன்கள் என்று ஒரு பட்டியல் உண்டு. அந்த வகையில் ஹீரோவை தெறித்தோட விட்ட 6 வில்லன்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read:ரீ என்ட்ரியில் சோபிக்காத 5 நடிகர்கள்.. அரவிந்த்சாமி போல் முதல் படத்தோடு காணாமல் போன ஹீரோக்கள்

அரவிந்த்சாமி: 2015ல் வெளிவந்த ஆக்சன் திரில்லர் படம் தான் தனி ஒருவன். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்கிறார் அரவிந்த்சாமி. மேலும் இவர் தான் ஹீரோ என்று எண்ணும் அளவிற்கு இவரின் தோற்றம் அமைந்திருக்கும். இவரின் நடிப்பால் இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று தந்தது.

பிரகாஷ் ராஜ்: விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான் கில்லி. இப்படத்தில் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் திரிஷா மீது கொண்ட ஆசையால் அவரை படாதபாடு படுத்தி இருப்பார். செல்லம் என்று இவர் சொல்லும் மாடுலேஷன் படத்திற்கு ஹைலைட் ஆக அமைந்திருக்கும்.

Also Read:அருண் விஜய் படத்தில் நடித்த 2 நடிகர்கள்.. 3 பேருமே ஒரே குடும்பம்

பாபி சிம்ஹா: 2014ல் சித்தார்த்,லட்சுமிமேனன் மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த படம் தான் ஜிகர்தண்டா. இப்படத்தில் பெரிய வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருப்பார். வில்லனுக்கு ஏற்ற கதாபாத்திரம் அமைந்திருந்தாலும் படம் இறுதியில் குத்தாட்டம் போடுவது போல காட்டப்பட்டிருக்கும். இவருக்கு இப்படம் பேர் சொல்லும் படமாக அமைந்தது. மேலும் இப்படத்திற்கான தேசிய விருதை இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீலாம்பரி: படையப்பா என்றாலே ரஜினிக்கு வில்லியாக வரும் நீலாம்பரி தான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவிற்கு உடையிலும் நடையிலும் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார் ரம்யா கிருஷ்ணன். இப்படத்தில் ரஜினிக்கு இணையாக இவரும் போட்டி போட்டு நடித்திருப்பார். இவரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் மதிப்பை பெற்று தந்தது.

Also Read:லியோவை ஓரம் கட்ட வரும் ஏகே 62.. அஜித் கொடுக்க போகும் பிறந்தநாள் சர்ப்ரைஸ்

சத்யராஜ்: எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான படம் தான் இசை. இப்படத்தில் எஸ் ஜே சூர்யா இசையமைப்பாளராக நடித்திருப்பார். இசை பயிற்சிக்காக சத்யராஜ் இடம் செல்லும் போது அவரின் மூர்க்கத்தனத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகுவது போன்று படம் கொண்டு செல்லப்பட்டிருக்கும். வழக்கம்போல் சத்யராஜின் இம்சை இப்படத்தில் அமைந்திருக்கும்.

அருண்விஜய்: 2015ல் வெளியான படம் தான் என்னை அறிந்தால். இப்படத்தின் போலீஸ் டிஜிபியாக வரும் அஜித்துக்கு குடைச்சல் கொடுக்கும் வில்லனாக அருண்விஜய் இடம் பெற்றுள்ளார். இப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இவரின் இக்கதாபாத்திரம் மேலும் பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

Also Read:பாபி சிம்ஹாவின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை ட்ரெய்லர்.. இங்கேயும் பயமுறுத்தும் ஆர்யா

 

Trending News