திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இளம் குந்தவை இந்த சீரியல் நடிகையின் மகளா.? குடும்பத்துடன் வைரலாகும் புகைப்படம்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வாரம் வெளிவந்த இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் இதனுடைய பாக்ஸ் ஆபிஸ் நேற்று வரை 150 கோடிக்கும் மேலாக வசூல் ஆகி வருகிறது. இந்நிலையில் இன்னும் கூடுதலாகவே பார்வையாளர்கள் தியேட்டர்களில் வந்து பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுவரை யாரும் செய்யாத விஷயத்தை லைக்கா நிறுவனம் செய்திருக்கிறது.

அதாவது எப்பொழுதுமே ஒரு படம் வெளியிடுவதற்கு முன்னதாக அந்த படத்தின் கதையின் சுருக்கமாக ட்ரெய்லரை வெளியிடுவார்கள். அப்படி இருக்கையில் ஏற்கனவே வெளிவந்து மூன்று நாட்கள் ஆன பிறகு நேற்று மாலை புதிதாக ஒரு ட்ரெய்லரை வெளியிட்டு மக்களை குஷி படுத்திருக்கிறார்கள். இந்த ட்ரெய்லரில் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

Also read: பொன்னியின் செல்வன் வெற்றியால் 20 படத்தில் கமிட்டான நடிகர்.. திரும்பவும் மார்க்கெட்டை உயர்த்திய மணிரத்னம்

இது முழுக்க முழுக்க இன்னும் கூடுதலாகவே லாபத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் லைக்கா எடுத்த அதிரடி முடிவாக இருக்கிறது. அத்துடன் பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்க்காதவர்கள் கூட பார்க்க வைப்பதற்கு இந்த மாதிரியான ஒரு தந்திரத்தை செய்திருக்கிறார். அடுத்ததாக இந்த படத்தில் இளம் குந்தவையாக நடித்த நிலா, திரிஷாவை இளம் வயதில் பார்ப்பது போலவே இருக்கும்.

இதற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய மாதிரி தேடித்தேடி பார்த்து அந்த கேரக்டருக்கு நடிக்க வைத்திருக்கிறார். இவர் யார் என்றால் பிரபல சீரியல் நடிகையின் மகள்தான் குந்தவையாக நடித்தவர். இந்த குந்தவையின் அம்மா 90ஸ் காலத்தில் பெரிய திரை முதல் சின்னத்திரை வரை நடிகையாக கலக்கியவர்.

Also read: கல்கியின் நாவலுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. பொன்னியின் செல்வன் 2-ல் மணிரத்னம் செய்த பல குளறுபடிகள்

அவர் யார் என்றால் காவியா அஞ்சலி, தெய்வம் தந்த வீடு போன்ற பல நாடகங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர். அவர்தான் கனிகா பாரதி. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அன்பே வா சீரியலில் ஹீரோக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இவருடைய மகள்தான் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் குந்தவையாக நடித்தவர்.

தற்போது இவர் குடும்பத்துடன் இருக்கக்கூடிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு வைரலாகி வருகிறது. அதில் அம்மா அப்பா உடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதிலும் பார்ப்பதற்கு ரொம்பவே லட்சணமாகவும் அழகாகவும் இருக்கிறார். இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தால் இளம் குந்தவைக்கு பட வாய்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இளம் குந்தவையின் அம்மா கனிகா பாரதி

young gundavai-cinemapettai

இளம் குந்தவையின் அம்மா அப்பா

young gundavi mom dad-cinemapettai

Also read: புலிகளின் வேட்டைக்கு தயாரான சூழ்ச்சிக்காரர்கள்.. பரபரப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

Trending News