வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. கண் கலங்க வைத்த சம்சாரம் அது மின்சாரம்

தமிழ் சினிமாவில் குடும்பத்தை மையமாக வைத்து அதிலும் கூட்டுக் குடும்பத்தின் சந்தோசங்களை அனுபவிக்கும் வகையில் சில படங்கள் வெளிவந்து பெரிய வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சில படங்களை பற்றி பார்க்கலாம்.

கடைக்குட்டி சிங்கம்: பாண்டிராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கார்த்தி, சத்யராஜ், பானுப்பிரியா, விஜி சந்திரசேகர், ப்ரியா பவானி சங்கர் மற்றும் சாயிஷா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தின் கதையானது கூட்டு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் அக்கா தங்கையால் ஏற்படும் பிரச்சனைகளை சரியான முறையில் சரி செய்து அந்த கூட்டு குடும்பத்தை பிரியவிடாமல் பாதுகாப்பு தான் முக்கிய நோக்கமாக இருக்கும். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Also read: சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பல கோடி நஷ்டம்.. 6 வருட போராட்டம் தனுஷ், கார்த்தியை சமாளிப்பாரா.?

சூரியவம்சம்: விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு சூரியவம்சம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், ராதிகா, தேவயானி, பிரியா ராமன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக இருப்பதையும் அதில் கடைசி மகன் செய்த செயல் பிடிக்காமல் தனியாக அனுப்பிவிடுவார். அதன் பின் அவர்கள் பெரிய அளவில் வாழ்ந்து காட்டி அந்த குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதை மையமாகவைத்து அமைந்திருக்கும். இப்படம் ஆல் டைம் ஃபேவரைட் படமாக ரசிகர்கள் மனதில் குடி கொண்டிருக்கிறது.

முத்துக்கு முத்தாக: ராசு மதுரவன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு முத்துக்கு முத்தாக திரைப்படம் வெளிவந்தது. இதில் இளவரசு, சரண்யா பொன்வண்ணன், நடராஜ், விக்ராந்த், ஓவியா மற்றும் மோனிகா ஆகியோர் நடித்தார்கள். இத்திரைப்படம் இயல்பான குடும்பத்தில் இருக்கும் உறவுகளால் ஏற்படும் பிரச்சினையால் அவர்களுக்குள் வரும் பிரிவுகளை சொல்லும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும். அத்துடன் கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் என்னென்ன சந்தோசங்கள் வரும் என்பதை இந்த காலத்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கும்.

Also read: 2 திருமணம் செய்து விவாகரத்தான சரத்குமார்.. பொன்னியின் செல்வன் 2 விழாவில் பார்த்திபனுக்கு நடந்த அவமானம்

வேல்: ஹரி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வேல் திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, அசின், வடிவேலு மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் சூர்யா வெற்றி வேல் மற்றும் வாசு என்று இரட்டை சகோதரர் வேடத்தில் நடித்தார். இப்படம் முழுக்க முழுக்க குடும்ப படமாக “ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு” இந்த வரிகளுக்கு ஏற்ப கூட்டு குடும்பமாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.

சம்சாரம் அது மின்சாரம்: விசு இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் லட்சுமி, சந்திரசேகர், ரகுவரன், மனோரமா மற்றும் விசு ஆகியோர் நடித்தார்கள். இப்படம் கூட்டு குடும்பத்தால் ஏற்படும் பிளவுகளையும் அவர்களை மீண்டும் ஒன்று சேர்த்து வைப்பதற்கு மூத்த மருமகள் எடுக்கும் முயற்சிகளை சுற்றி இக்கதை அமைந்திருக்கும். இதில் வரும் ஒவ்வொரு வசனங்களும் வேற லெவல்ல இருக்கும். இதில் வருகிற ஒரு சில காட்சிகளை பார்க்கும் பொழுது நம் கண்களில் நம்மளை அறியாமல் கண்ணீர் வர வைக்கும். அதிலும் விசுவின் அம்மையப்பன் கேரக்டர் ஒரு யதார்த்தமான குடும்பத்தில் இருக்கும் நடுத்தர அப்பாவாக நடித்தார்.

Also read: 14 வருடத்திற்கு முன்பே விஜய், சூர்யாவிற்கு மணிரத்னம் கொடுத்த ஆஃபர்.. தட்டிக் கழித்து வருந்தும் 10 பிரபலங்கள்

Trending News