புதன்கிழமை, டிசம்பர் 18, 2024

லோகேஷை கைக்குள் போட்டுக்கொண்ட சன் பிக்சர்ஸ்.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்து வளைத்து போட இப்படி ஒரு திட்டமா? 

லோகேஷ் கனகராஜ் தற்போது இந்தியாவில் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர் ஒரு படத்தை இயக்குவதற்காக சம்பளம் 50 கோடி வரை வாங்குகிறார். இது போதாது என்று தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சண்டை பயிற்சி இயக்குனர் அன்பறிவ் இயக்கும் படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்தும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதனால் சன் பிக்சர்ஸ் இந்த படத்தில் நடிப்பதற்காக லோகேஷ் கனகராஜுக்கு 10 கோடி சம்பளம் கொடுக்க உள்ளார்களாம். இது இரண்டாம் நிலை கதாநாயகர்களின் சம்பளம். ஆனால் லோகேஷுக்கு முதல் படத்திலிருந்து இவ்வளவு சம்பளத்தை சன் பிக்சர்ஸ் கொடுத்திருப்பதற்கு நிச்சயம் முக்கிய காரணம் இருக்கும். 

Also Read: அனிருத்தை ஓரம்கட்ட வரும் ஜிவி பிரகாஷ்.. அடுத்தடுத்த படவாய்ப்பால் எடுத்த முக்கிய முடிவு

இப்போது இயக்குனராக பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் மற்றும் யூத் ஐகான் அனிருத் ஆகியோர் புதிய படத்தில் அறிமுகமாகிறார்கள். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை லோகேஷ் தான் எழுதுகிறார். இதுவும் வழக்கம் போல் ஸ்டைலில் ஆக்சன் திரில்லராக இருக்கும். மேலும் இந்த படத்திற்காக 80 கோடி வரை செலவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது.

Also Read: லியோ படத்தில் இணைந்த கைதி பட நடிகர்.. லோகேஷ் மறைத்து வைத்த முக்கிய LCU கன்பார்ம் தான்

இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் லோகேஷ், அனிருத்தை நம்பி சன் பிக்சர்ஸ் போட்டு இருப்பது நிச்சயம், அதன் மூலம் இரண்டு மடங்கு கிடைக்கும் என கேரண்டியுடன் தான் செய்கின்றனர். ஏற்கனவே லோகேஷ் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது முழு படம் ஒன்றில் லீட் ரோலில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

தற்போது லோகேஷ் விஜய்யின் லியோ படப்பிடிப்பில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கிறார். காஷ்மீர், கொடைக்கானல் ஷெட்யூல் எல்லாம் முடிந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து லோகேஷ் நடிகராக அவதாரம் எடுக்கப் போகிறார்.

Also Read: லியோ படத்தில் இத்தனை பாடல்களா?. அனிருத், லோகேஷ் போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்

- Advertisement -

Trending News