1977-ல் நிறுவப்பட்ட பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கமலஹாசன், முரளி, சத்யராஜ், கார்த்தி, அஜித் போன்றோரின் படங்களை தயாரித்து அவர்களுக்கு அடையாளத்தை கொடுத்தது. இருப்பினும் சினிமாவில் வளர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த டாப் நடிகர்களை வளர்த்துவிட்ட அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கா இப்படி ஒரு கொடுமை ஏற்பட்டிருக்கிறது என கோலிவுட்டே தற்போது ஆதங்கப்படுகிறது.
ஏனென்றால் பல தரமான படங்களை கொடுத்த டிஜி தியாகராஜாவின் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்போது திரைப்படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு சீரியல்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் டாப் நடிகர்களும் 100 கோடிக்கு குறையாமல் சம்பளம் வாங்குகின்றனர்.
Also Read: சிவாவின் கண்டிஷனுக்கு செவிசாய்த்த சத்ய ஜோதி பிலிம்ஸ்.!
இதனால் படத்தின் பட்ஜெட் தாறுமாறாக எகிறுவதால் நவீன காலத்தில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் சத்யஜோதி பிலிம்ஸ் சீரியல் பக்கம் சென்றுவிட்டது. 50 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஊறி கிடக்கும் இந்த நிறுவனத்திற்கு இது புதிதல்ல. இதற்கு முன்பே சூப்பர் ஹிட் சீரியல்களான ஆனந்தம், கல்யாணம், இதயம், ஆண் பாவம், புகுந்த வீடு, மாயா, சுமங்கலி, திருமகள் போன்ற சீரியல்களை தயாரித்திருக்கிறது.
இப்போது மறுபடியும் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் ‘சபாஷ் மீனா’ என்ற சீரியலை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த புத்தம் புது சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் விவரம் குறித்த முழு அப்டேட்டும் இனிவரும் நாட்களில் வெளியாகும். மேலும் இந்த சீரியலின் டைட்டிலை வைத்து பார்க்கும் போதே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை, அஜித்தின் விவேகம், விஸ்வாசம், வீரம், தனுஷின் பட்டாஸ், மாறன் போன்ற படங்கள் மட்டுமல்லாமல் தற்போது கேப்டன் மில்லர் படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்க்கா இப்படி ஒரு நிலைமை! என பலரும் வருத்தப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் டாப் நடிகர்கள் தங்களது சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்திக் கொண்டிருப்பது தான் படத்தின் பட்ஜெட் எகிறுகிறது.
இதனால் தயாரிப்புகள் குறைந்தது 200 கோடியை செலவு செய்தால் மட்டுமே நடுத்தரமான படத்தை தயாரிக்க முடிகிறது. அதனால் தான் இப்போது 50 வருடங்களாக கோலிவுட்டை ஆட்டி படைத்த சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது ரேஸ்சில் இருந்து விலகி முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழி விட்டு சின்னத்திரை பக்கம் சென்று விட்டது.
Also Read: ஆபரேஷன் செய்து இரும்பு பிளேட்டோடு சுற்றும் 5 ஹீரோக்கள்.. உலோக நாயகனாக மாறிய உலக நாயகன்