புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அலங்கரித்த நிஜ குந்தவை.. வைரலாகும் இளவரசியின் போலி புகைப்படம்

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. ஒரு சில எதிர்மறையான கருத்துக்கள் வெளிவந்தாலும் வசூலை பொருத்தவரை இப்படம் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

சோழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் வெளியாகி உள்ள இந்த படைப்பில் நடித்துள்ள பல கேரக்டர்களும் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர். ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்த கதாபாத்திரம் தான் இளவரசி குந்தவை. சோழ சாம்ராஜ்யத்தை கட்டிக் காத்த தைரியமுள்ள இளவரசியான இவரின் கதாபாத்திரத்தில் தான் திரிஷா நடித்திருந்தார்.

Also read: கொடூரமாக நடிக்கும் அர்ஜுன்.. இணையத்தில் லீக் ஆன லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரம்

ரியல் இளவரசி இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று பலரையும் வியக்க வைக்கும் வகையில் இருந்தது அவருடைய அழகும், நடிப்பும். அதுவே இப்போது திரிஷாவுக்கான அடையாளமாகவும் மாறி இருக்கிறது. ஆனால் உண்மையில் இளவரசி குந்தவை நாச்சியார் எப்படி இருந்திருப்பார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த வகையில் சோழ இளவரசியின் அரிய புகைப்படம் ஒன்று மலேசிய நாட்டில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் பளபளக்கும் பட்டு உடையும், ஆபரணங்களும் என ஒரு ஓவியம் போல் இருக்கிறார். ஒரு இளவரசி இப்படித்தான் இருந்திருப்பாரோ என வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது அந்த புகைப்படம்.

Also read: சாமினு அழைத்தால் சாமி ஆகிவிடுவாரா.! ஓவர் ஹெட் வெயிட்டில் இரங்கல் செய்தி பதிவிட்ட இளையராஜா

மேலும் நம் சோழர்களை பெருமைப்படுத்தும் வகையில் மலேசிய நாட்டில் இந்த புகைப்படம் இருப்பது நிச்சயம் நம்மை பெருமைப்படுத்தும் ஒன்றாகும். அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பிறகு தான் ரசிகர்கள் நிஜ கதாபாத்திரங்கள் எப்படி இருக்கும் என்பதை தேட ஆரம்பித்திருக்கின்றனர்.

வைரலாகும் இளவரசியின் போலி புகைப்படம்

real-kundhavai
real-kundhavai

அதிலும் திரிஷாவின் கேரக்டரால் ஈர்க்கப்பட்ட பலரும் ஒரிஜினல் இளவரசி எப்படி இருந்திருப்பார் என்று தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வகையில் இப்போது வெளிவந்துள்ள ரியல் குந்தவையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் உண்மையில் இது ஒரு பொய்யான புகைப்படம் ஆகும். அந்த காலகட்டத்தில் திருமணத்திற்காக தயாரான மணப்பெண்ணின் போட்டோ தான் அது. பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் தான் அந்த போட்டோவை பதிவிட்டுள்ளார். ஆனால் அது தெரியாமல் தற்போது இந்த போட்டோவை பலரும் இணையதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Also read: குந்தவை திரிஷா காதலனுடன் டேட்டிங் செய்த பிக் பாஸ் பிரபலம்.. பகிரங்கமாக ஒத்துக் கொண்ட நடிகை

- Advertisement -spot_img

Trending News