வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

மலையாள சினிமாவில் ரஜினி நடித்த 2 படங்கள்.. கமலுடன் இணைந்து போட்ட வெற்றி கூட்டணி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா ரசிகர்களால் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஒரு நடிகர். மற்ற மொழிகளின் முக்கியமான நடிகர்கள் எப்படி தமிழ் படங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு கெஸ்ட்ரோலில் நடிக்கிறார்களோ, அதே போன்று ரஜினிகாந்த் மற்ற மொழிகளில் தலை காட்டி இருக்கிறார்.

மேலும் நண்பர்களுக்காகவும், தனக்கு பிடித்த ஏதாவது ஒரு கேரக்டர்கள் இருந்தாலும் ரஜினிகாந்த் மற்ற மொழி படங்களில் அதை ஏற்று நடித்து இருக்கிறார் . உதாரணத்திற்கு ரஜினிகாந்த்திற்கு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை திரைப்படம் ரொம்பவும் பிடிக்கும். அந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும்பொழுது விஜயகுமார் கதாபாத்திரத்தை ரஜினிகாந்த் விருப்பப்பட்டு தெலுங்கில் நடித்தார்.

Also Read:ரீ ரிலீசுக்கு தயாராகும் ரஜினியின் 100 கோடி வசூல் படம்.. எல்லா இடத்திலும் தலைவர் கில்லி மாதிரி

அதேபோன்று இந்த இந்தியிலும் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த ரா ஒன் திரைப்படத்தில் கூட ரஜினிகாந்த் எந்திரன் படத்தின் சிட்டி கேரக்டரை கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்திருப்பார். இப்படி தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்த ரஜினிகாந்த் மலையாளத்தில் இரண்டே படங்களில் நடித்திருக்கிறார்.

இரண்டே படங்களில் மட்டுமே நடித்த ரஜினிகாந்த்திற்கு ஒரு படம் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்தது. அந்த படத்தில் ரஜினி உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரது கூட்டணியும் தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் மலையாள சினிமா உலகிலும் ஜெயித்துக் காட்டியிருக்கிறது.

Also Read:ஏவிஎம் மியூசியத்தில் கெத்தாக நிற்கும் ரஜினி சிலை.. வருகை தந்து சிறப்பித்த கமல்

தமிழில் கர்ஜனை என்னும் பெயரில் வெளியான ரஜினியின் திரைப்படம் ஒரே நேரத்தில் மலையாளத்தில் கர்ஜனம் மற்றும் தெலுங்கில் கர்ஜனை என்னும் பெயரிலும் படமாக்கப்பட்டது. கர்ஜனம் திரைப்படம் முதலில் மலையாள ஹீரோ ஜெயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் வேளையில் அவர் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் ரஜினியை வைத்து மீண்டும் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும் 1979 ஆம் ஆண்டு இணைந்து நடித்த திரைப்படம் அலாவுதீனும் அற்புத விளக்கும். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் படமாக்கப்பட்டது. இரண்டு மொழிகளிலுமே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

Also Read:கமலின் வீட்டு வாசலிலேயே காத்துக் கிடந்த சூப்பர் ஸ்டார்.. உண்மையை உடைத்த வாரிசு

- Advertisement -spot_img

Trending News