தன்னுடைய மெல்லிசையால் ரசிகர்களை பல வருடங்களாக கட்டிப்போட்ட பெருமைக்குரியவர் தான் இளையராஜா. மனதை மயக்கும் காதல் பாடல்கள், தாலாட்டு பாடல்கள் என இவருடைய இசைக்கு மயங்காதவர்களே கிடையாது. அதிலும் காரில் செல்லும்போது இவருடைய இசையை கேட்டபடி செல்லும் ரசிகர்கள் ஏராளம் உண்டு.
அது மட்டுமல்லாமல் காது குத்து, திருமண நிகழ்வு போன்ற விழாக்கள், டீக்கடைகள் என அனைத்திலும் இவருடைய பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட பெருமைக்குரிய இளையராஜா சினிமாவிற்கு வந்து இன்றோடு 47 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அந்த வகையில் அவருடைய 6 பெஸ்ட் படங்கள் என்ன என்பதை இங்கு காண்போம்.
Also read: இரட்டை அர்த்த வரிகளை பார்த்து முகம் சுழித்த பாடகி.. பாட முடியாதா என ரோஸ்ட் செய்த இளையராஜா
மௌன ராகம்: மணிரத்தினம் இயக்கத்தில் மோகன், ரேவதி, கார்த்திக் ஆகியோர் நடிப்பில் கடந்த 1986 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. அழகிய காதல் கதையாக வெளிவந்த இப்படத்தில் இளையராஜாவின் இசை அற்புதமாக இருக்கும். அதிலும் மனதை வருடும் பாடல்கள் இப்போது வரை ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
நாயகன்: கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. மும்பையின் நிழல் உலக தாதாவான வரதராஜ முதலியார் பற்றிய கதைக்களமாக அமைந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் இளையராஜாவின் இசையில் தென்பாண்டி சீமையிலே, நீ ஒரு காதல் சங்கீதம் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் மனதை வருடும் வகையில் இருக்கும்.
அஞ்சலி: மணிரத்தினம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் 1990 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. இதில் வரும் அனைத்து பாடல்களும் ரசிக்கும் வகையில் இருக்கும். அதிலும் குழந்தைகளை மையப்படுத்தி இருக்கும் கதை என்பதால் இசையும் அதற்கேற்ற வகையில் துள்ளலோடு இருக்கும். அந்த வகையில் இப்படம் இளையராஜாவின் 500 ஆவது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது.
தளபதி: ரஜினிகாந்த், மம்முட்டி நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அம்மா பாசம், நட்பு என அனைத்தும் கலந்த கலவையாக இருந்த இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் ரஜினி தன் அம்மாவை பார்க்கும் அந்த நொடியில் வரும் சின்ன தாயவள் என்ற பாடல் மிகவும் உருக்கமாக இருக்கும்.
தாரை தப்பட்டை: பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் இளையராஜாவுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாக அமைந்தது. ஏனென்றால் இது அவருடைய 1000 ஆவது திரைப்படமாகும். அந்த வகையில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும்.
Also read: சாமினு அழைத்தால் சாமி ஆகிவிடுவாரா.! ஓவர் ஹெட் வெயிட்டில் இரங்கல் செய்தி பதிவிட்ட இளையராஜா
விடுதலை: வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் பலரையும் கவர்ந்த இப்படத்தில் இளையராஜாவின் இசை தான் பக்க பலமாக அமைந்தது. அதிலும் இப்படத்தில் வரும் காட்டு மல்லி என்ற பாடல் தான் இப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு இசை ஜாம்பவானாக இருக்கும் இளையராஜா இன்றைய தலைமுறைக்கு சவால் விடும் வகையில் இசைஞானியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது 48வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த நாளில் அவர் மேலும் பல பாடல்களை கொடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது.
Also read: நண்பன் இறந்ததற்கு தாமதமாக வந்த இளையராஜா.. உயிர் போகும் போது வந்ததால் கோபத்தில் பேசிய வாரிசு.!