ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிக்பாஸ் போனா மட்டும் பட வாய்ப்பு வருமா.? பப்ளிக்கா முத்தம் கொடுத்தா இப்படி தான் புலம்பனும் வின்னர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சொல்லப்போனால் சின்னத்திரை வட்டாரத்திலேயே அந்த நிகழ்ச்சி தான் டிஆர்பியை எகிற வைக்கும். அந்த அளவுக்கு பல சுவாரசியங்களோடு அந்த ஷோ களைக்கட்டும். இதற்கு உலக நாயகனும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

அந்த வகையில் இதுவரை ஆறு சீசன்களை கடந்துள்ள விஜய் டிவி தற்போது ஏழாவது சீசனுக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல் சீசனின் வின்னரான ஆரவ் இந்த நிகழ்ச்சியால் எந்த பலனும் இல்லை, சினிமா வாய்ப்பே வராது என்று பேசி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாடலாக இருந்த இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக கவனம் பெற்றார்.

Also read: சந்தி சிரிக்க வைத்த விஜய் டிவி ஜோடி.. இப்படி ஒரு மானங்கெட்ட காதல் கல்யாணம் தேவையா

இதற்கு முக்கிய காரணம் ஓவியா என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்த பெருமையும் ஆரவுக்கு உண்டு. இது அப்போது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்களே என்ற நல்ல எண்ணத்தில் விஜய் டிவி அந்த கன்றாவி காட்சிகளை எல்லாம் ஒளிபரப்பவில்லை. இருந்தாலும் அவர் பப்ளிக்காக நான் ஓவியாவிற்கு முத்தம் கொடுத்தேன் என ஒப்புக்கொண்டார்.

இப்படி பல சர்ச்சைகளைத் தாண்டி பட்டத்தை வென்ற அவர் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். மார்க்கெட் ராஜா என்ற படத்தில் ஹீரோவாக நடித்த தொடங்கிய அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து உதயநிதியின் கலகத் தலைவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இருப்பினும் அவரால் சினிமாவில் நினைத்த உயரத்தை அடைய முடியவில்லை என்பதுதான் உண்மை.

Also read: அவருக்கு ஜோடியாக நடிப்பீர்களா.? பட ப்ரோமோஷனில் பத்ரகாளியாக மாறிய வரலட்சுமி

அந்த கடுப்பில் இப்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி ஒரு பேட்டியில் தாறுமாறாக பேசியிருக்கிறார். அதாவது சினிமாவில் ஒருவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் அவருக்கான பிசினஸ் என்ன என்பதை தான் முதலில் பார்ப்பார்கள். பிக்பாஸ் போனால் மட்டும் வாய்ப்புகள் வந்துவிடாது, சினிமா என்பது முற்றிலும் வேறு என்று தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த பலரும் இப்போதுதான் அது தெரிகிறதா என அவரை விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் பல பிரபலங்களும் இதன் மூலம் சினிமா வாய்ப்பு பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் தான் வருகின்றனர். அதனாலேயே இல்லாத பிரச்சனையையும் ஊதி பெரிதாக்கி மக்கள் முன் தங்களை பிரபலப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் அதெல்லாம் சினிமாவிற்கு ஒர்க்கவுட் ஆகாது என்பது இப்போது ஆரவ் பேச்சின் மூலம் தெரிகிறது.

Also read: எல்லையே மீறிய கதிர்.. அவமானப்பட்ட ஞானம், சக்தியை காப்பாற்றிய கௌதம்

- Advertisement -

Trending News