திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அதிக வாத்து முட்டை வாங்கிய முதல் 5 ஐபிஎல் வீரர்கள்.. தமிழ்நாட்டு மானத்தை வாங்கிய தினேஷ் கார்த்திக்

2023 ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஒவ்வொரு போட்டிகளும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய நான்கு அணிகள் இந்த வருட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக ஜெய்ஸ்வால், பதோனி, சிவம் டுபே போன்ற இளம் வீரர்கள் இந்த ஐபிஎல்-லை பயன்படுத்தி கொண்டுள்ளனர். இவர்களுக்கு இந்திய அணியில் நிச்சயமாக நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதேபோல் இந்த ஐபிஎல் இல் நிறைய வீரர்கள் சொதப்பியும், டக் அவுட் ஆகியும் உள்ளனர் அப்படி ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களை இதில் பார்க்கலாம்.

தினேஷ் கார்த்திக்: இவர் 6 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். டெக்கான் சார்ஜஸ், கே கே ஆர், மும்பை இந்தியன்ஸ் போன்ற ஆறு அணிகளுடன் மொத்தமாக 221 போட்டிகளில் விளையாடி 17 முறை டக் அவுட் ஆகி முதலிடத்தை பிடித்துள்ளார்..

ரோகித் சர்மா: மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜஸ் அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் இவர் விளையாடி உள்ளார். 236 போட்டிகளில் விளையாடிய இவர் 16 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். விராட் கோலி பத்து முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். அவர் 224 போட்டியில் விளையாடியுள்ளார்.

சுனில் நரேன்: இவர் கே கே ஆர் அணிக்கு மட்டுமே மொத்தமாக 96 போட்டிகள் விளையாடி இருக்கிறார்.அதில் 15 முறை டக் அவுட் ஆகி சாதனை படைத்திருக்கிறார். சுழற்பந்து வீச்சாளரான இவர் சில போட்டிகளில் ஓபனிங் களமிறங்கி அதிரடி ஆட்டம் ஆடி அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.

மந்திப் சிங்: இவர் 98 போட்டியில் விளையாடி மொத்தம் 15 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். சுனில் நரைனை காட்டிலும் இவர் இரண்டு போட்டியில் மட்டும் அதிகம் விளையாடியிருக்கிறார். அந்த அடிப்படையில் பார்த்தால் இவர் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

கிளன் மேக்ஸ்வெல்: ஒரு போட்டியை எளிதில் எதிரணியிடமிருந்து மாற்றக்கூடிய திறமை இவருக்கு உண்டு. இவர் மொத்தமாக 120 போட்டிகளில் விளையாடி 14 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இந்த ஐபிஎல் போட்டியில் இவர் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

Trending News