சாதாரண மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து இப்போது கோலிவுட் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு இப்போது போதாத காலமாக மாறிவிட்டது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதனால் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்த ரிலீஸ் ஆகும் அயலான், மாவீரன் போன்ற படங்களின் மூலம் தன்னை நிரூபிக்க பார்க்கிறார். இருப்பினும் சிவகார்த்திகேயனின் படங்களை எடுக்க தயங்கும் 5 இயக்குனர்களை பற்றி பார்ப்போம். அதிலும் வெங்கட் பிரபு இப்போது உச்சாணி கொம்பையே வளைத்து பிடித்து கையில் வைத்திருக்கிறார்.
சிபி சக்கரவர்த்தி: இயக்குனர் ஷங்கரின் சிஷ்யன் அட்லி இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபிச் சக்கரவர்த்தி முதன் முதலாக சிவகார்த்திகேயன் டான் படத்தை இயக்கியது மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே 100 கோடி வசூலை சாத்தியமாக்கி நிலையில், அடுத்து அவர் பெரிய பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு வெகு சுலபமாகவே கிடைத்தது. இதனால் மறுபடியும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவதை காட்டிலும் மற்ற நடிகர்களை வைத்து இயக்குவதில் தான் ஆர்வம் காட்டினார். அதிலும் ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி தான் இயக்குவதாக சொல்லப்படுகிறது.
வெங்கட் பிரபு:கலகலப்பான படங்களை இயக்குவதில் ஸ்பெஷலான இயக்குனர் வெங்கட் பிரபு இத்தனை வருடங்களாக சிவகார்த்திகேயனை வைத்து மட்டும் படம் எடுக்க முயற்சி செய்யவில்லை. பொதுவாக சிவகார்த்திகேயனுக்கு காமெடி சென்ஸ் அதிகம் இருக்கும். ஆகையால் வெங்கட் பிரபுவின் படத்திற்கு அவர் பொருத்தமானவர் தான். இருப்பினும் சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ண அவர் முன் வரவில்லை. அது மட்டுமல்ல இப்போது வெங்கட் பிரபுவின் 10 வருட தவத்திற்கு கிடைத்தது போல் விஜய்யின் தளபதி 68 பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
Also Read: திரிஷாவுடன் போட்டி போட்டு மூக்குடைந்த நடிகை.. லியோவால் களத்தில் குதிக்கும் குளிர்பான நடிகை
தேசிங்கு பெரியசாமி: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ணுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது சிம்புவின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி தான் இயக்குகிறார். இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இதில் சிம்பு இரட்டை வேடத்தில் வரலாற்று பின்னனியில் உருவாக்கி இருக்கும் கதைக்களத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டு 2024-ம் ஆண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
எம். ராஜேஷ்: நகைச்சுவை படங்களை இயக்குவதில் கெட்டிக்காரரான இயக்குனர் எம். ராஜேஷ், ஜீவா உடன் சிவா மனசுல சக்தி, ஆர்யாவுடன் பாஸ் என்கின்ற பாஸ்கரன், உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற முழு நீள நகைச்சுவை படங்களை இயக்கி இருக்கிறார். ஆனால் இந்தப் படங்களை காட்டிலும் 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கிய மிஸ்டர் லோக்கல் திரைப்படம் அவருக்கு படு தோல்வியை தந்தது. அதனால் அடுத்த முறை சிவகார்த்திகேயன் பக்கம் கூட தலை வைத்து படுக்க மாட்டேன் என பெரிய கும்பிடாய் போட்டு விட்டார்.
பொன்ராம்: கிராமத்து பின்னணியில் கலகலப்பான படங்களை இயக்குவது தான் இயக்குனர் பொன்ராமின் ஸ்பெஷல். இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ரஜினிமுருகன், சீமராஜா போன்ற படங்களையும் இயக்கினார், ஆனால் சீமராஜா அவருக்கு படு தோல்வியை தந்தது. ஆகையால் ஒருமுறை ஒர்க் அவுட் ஆனது அடுத்தடுத்து ஒர்க் அவுட் ஆகாது என வேறு நடிகர்களை வைத்து இயக்கத்தான் பொன்ராம் தற்போது ஆர்வம் காட்டுகிறார்.
இவ்வாறு இந்த ஐந்து இயக்குனர்கள் தான் தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க தயக்கம் கொள்கின்றனர். அதிலும் வெங்கட் பிரபு இப்போது தளபதி 68 பட வாய்ப்பை வைத்திருப்பது அவருடைய காத்திருப்புக்கு கிடைத்த பரிசாகவே பார்க்கப்படுகிறது.
Also Read: கேரியர் பெஸ்டாக வெங்கட் பிரபு கொடுத்த 5 படங்கள்.. விஜய் மெர்சலான சூப்பர் ஹிட் படம்