தற்போது இயக்குனர்களில் எங்கு திரும்பினாலும் லோகேஷின் புராணம் தான் நாளா பக்கமும் பரவி வருகிறது. அதற்கு காரணம் இவர் எடுத்த படங்களின் பட்டியல் தான். அதிலும் கடைசியாக கமல் நடித்து வெளிவந்த விக்ரம் படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்கும் வகையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதனை அடுத்து விஜய்யுடன் கூட்டணி வைத்து லியோ படத்தை எடுத்து பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் கிளப்பி விட்டு விட்டார்.
அதனாலேயே தற்போது 50 கோடி சம்பளத்தை அசால்டாக வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக இவரை தக்க வைத்துக் கொண்டார். அத்துடன் எல்லா நடிகர்களும் இவருடைய படங்களில் நடிப்பதற்கு தவமாய் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் இப்பொழுது இவருடைய இமேஜ் இந்த அளவுக்கு கூடி இருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் முதல் படத்தை எடுப்பதற்கு தட்டு தடுமாறி தான் வளர்ந்து வந்தார்.
அந்த நேரத்தில் இவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டவர் தான் எஸ் ஆர் பிரபு. இவர் ட்ரீம் வாரியார் நிறுவனத்தின் தயாரிப்பாளர். இவர்தான் லோகேஷ் கனகராஜ் எடுத்த முதல் படமான மாநகரம் படத்தை பக்க பலமாக இருந்து தயாரித்தார். அத்துடன் இந்த படம் தயாரிக்கும் பொழுதே லோகேஷிடம் ஒரு கண்டிஷனை போட்டு விட்டார். அதாவது அடுத்து தொடர்ந்து மூன்று படங்களும் எங்கள் நிறுவனத்தில் பண்ண வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அதற்கு லோகேஷும் சம்மதம் தெரிவித்த நிலையில் இவருடைய அடுத்த படமாக கைதி படத்தை அந்த நிறுவனத்துடனே இணைந்தார். இப்படி இரண்டு படங்கள் எடுத்த நிலையில் அடுத்து மூன்றாவது படத்தை எதுவுமே சொல்லாமல் தயாரிப்பாளரை இழுத்து அடித்துக்
கொண்டிருக்கிறார்.
எப்படி இருந்தாலும் இவர் வளர்வதற்கு முக்கிய காரணமாய் இருந்தவர் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. அப்படி இருக்கும் பொழுது நாலு காசு கையில் சம்பாதித்ததும் வளர்த்து விட்டவரை தூக்கி எரியும் விதத்தில் அவர்களை அலட்சியப்படுத்தி வருகிறார். லோகேஷ் எப்படியும் மூன்றாவது படத்தை நம்முடன் நிறுவனத்தில் இணைவார் என்று இவர் நம்பி மோசம் போனதால் மிகவும் அப்செட்டில் தயாரிப்பாளர் இருக்கிறார்.
ஆனால் இவர் ஒண்ணும் மாநகரம் லோகேஷ் இல்லை. தற்போது இவர் ரேஞ்சே வேற லெவல்ல மாறி விக்ரம் லோகேஷ் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி இவருடைய சம்பளமும் பல நூறு மடங்கு ஆகி கோடியில் புரள ஆரம்பித்து விட்டார். அதனால் என்னமோ யோசித்து பெரிய தயாரிப்பாளர்களை தேடிப் போகிறார்.