திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

விவாகரத்திற்கு பின் 2 மாத கைகுழந்தையுடன் சூட்டிங் வந்த திவ்யாவின் புகைப்படம்.. அனுதாபம் தேட இப்படி ஒரு பொழப்பா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பூதாகரமான சண்டையாக வெடித்து திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னவ் பிரச்சனை. இப்போது எப்படி சின்னத்திரை நடிகர்களான சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி குறை சொல்கிறார்களோ இதற்கு அஸ்திவாரம் போட்டவர்களை திவ்யா ஸ்ரீதர், அர்னவ் தான்.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று ஒரு பெண் குழந்தையுடன் சீரியலில் நடித்து வந்தார் திவ்யா ஸ்ரீதர். இப்போது தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் திவ்யாவை அர்னவ் அடித்து சித்திரவதை படுத்துவதாக புகார் அளித்திருந்தார்.

Also Read : எல்லை மீறிய காதலன்.. டபுள் கேம் ஆடிய சம்யுக்தாவின் வண்டவாளத்தை வெளியே கொண்டு வந்த ஆடியோ

அதுமட்டும்இன்றி அர்னவ் உடன் ஜோடி போட்டு சீரியலில் நடித்து வரும் ஒரு நடிகை உடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவாதம் சில காலம் அனல் பறக்க பேசப்பட்டு ஆர்னவ் கைது ஆனார். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த அர்னவ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற சீரியலில் திவ்யா நடித்து வருகிறார். அவர் குழந்தை பிறக்கும் சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த தொடரில் நடித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் தனது இரண்டு பெண் குழந்தை உடன் ஷூட்டிங்க்கு திவ்யா வந்துள்ளார்.

Also Read : விஷ்ணு- சம்யுக்தா சண்டையை ஆரம்பித்ததை இவர்தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் செய்த மட்டமான வேலை

மேலும் படப்பிடிப்புக்கு வருவதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். குழந்தை பெற்ற இரண்டு மாதத்திலேயே சூட்டிங் வருவது பாராட்டக் கூடிய விஷயம் என்றாலும் இதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் போட காரணம் என்ன என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே அர்னவ் மீது அடுக்கடுக்கான புகார் கூறி அனுதாபம் தேடிய நிலையில், இப்போது மீண்டும் கைக்கு குழந்தையுடன் சூட்டிங் செல்வதாக அனுதாபம் ஏற்படுத்துகிறாரா என ரசிகர்கள் திவ்யா ஸ்ரீதரை விமர்சித்து வருகிறார்கள். உங்களது வேலை நடிப்பது என்றால் அதை மட்டும் செய்துவிட்டு போகலாம், தேவையில்லாமல் பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்வது எரிச்சலை உண்டாக்குவதாக கூறியுள்ளனர்.

divya-sridhar
divya-sridhar

Also Read : டிஆர்பி-யில் தெறிக்கவிடும் முதல் 5 சீரியல்கள்.. சன் டிவியை தூக்கிவிடும் குணசேகரன்

- Advertisement -

Trending News