அமீருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் தான் பருத்திவீரன். கார்த்தி முதல் முதலாக அறிமுகமான இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதேபோல் பிரியாமணிக்கும் தேசிய விருது வாங்கி கொடுத்த படமும் பருத்திவீரன் தான். இதற்கு முன்னதாக அமீர் மௌனம் பேசியதே மற்றும் ராம் படங்களை இயக்கியிருந்தார்.
இந்த இரண்டு படங்களுமே அவருக்கு வெற்றி கொடுக்காததால் பருத்திவீரன் படத்தை பெரிதும் நம்பி இருந்தார். அப்போது கலைஞர் கருணாநிதி இடம் இந்த படம் போட்டு காண்பிக்கப்பட்டது. கலைஞர் ஏற்கனவே நாடகத் துறையில் பணியாற்றியதாலும், எழுத்தாளர், வசனகர்த்தா போன்ற பணிகள் செய்ததால் சினிமாவில் அதிக ஆர்வம் உண்டு.
Also Read : கருணாநிதி கிட்டயே வேலையை காட்டிய எம்ஆர் ராதா.. சும்மா விடுவாரா?
இந்நிலையில் பருத்திவீரன் படத்தை கலைஞர் உன்னிப்பாக கவனித்தாராம். பக்கத்தில் எதுவும் பேசாமல் அமீர் மிகுந்த பயத்துடன் அமர்ந்து இருந்தாராம். அந்த சமயத்தில் படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த கலைஞர் திடீரென கோபமாக யோவ் எந்த ஊருல இந்தப் படத்தை எடுத்தீங்க என்ன கேட்டுள்ளார்.
அதற்கு அமீர் உடனே தேனி சுற்று வட்டாரத்தில் எடுத்தது ஐயா என கூறியுள்ளார். இங்கு என்ன மின்கம்பங்களே இல்லை, என்ன சமாச்சாரம் என்று அமீரிடம் கலைஞர் கேட்டுள்ளார். படத்துக்கு அது தேவையில்லை என்பதால் தூக்கிவிட்டேன் என்று அமீர் பயந்தபடி கூறியுள்ளார்.
Also Read : அமீர் பட தயாரிப்பாளர் விட்ட ஒரு கோடி சவால்.. உண்மை சம்பவத்தால் இந்தியாவில் படம் வெளியிட எதிர்ப்பு
ஓ அப்படியா, நான் கூட இன்னும் அங்கு கரண்ட் கம்பம் எல்லாம் போடவே இல்லை என்று பயந்து விட்டேன் என கலைஞர் கூறியிருந்தாராம். இதை பல வருடங்களுக்குப் பிறகு அமீர் விழாவில் பகர்ந்து கொண்டார். மேலும் சிறந்த நகைச்சுவை ஆற்றல் உடையவர் கலைஞர் என்றும் கூறியிருந்தார்.
கலைஞர் ஒரு முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மருத்துவர்களின் அறிவுரைபடி அவருக்கு தண்ணீர் அதிகமாக கொடுக்கக் கூடாது என கூறியிருந்தார்கள். அப்போது செவிலியர் கலைஞருக்கு சொட்டு சொட்டாக தண்ணீர் கொடுத்துள்ளார். அப்படி மருத்துவமனையில் இருக்கும் போதும் கூட கருணாநிதி செவிலியரை பார்த்து நீ என்ன பெங்களூர் பெண்ணா என நக்கல் அடித்துள்ளார். இப்படி கலைஞர் எதிலும் நகைச்சுவையாக பேசக்கூடியவர்.
Also Read : 234 தொகுதி, 6000 நபர்கள்.. கலைஞர் பிறந்த நாளில் பக்கா ப்ளான் போட்டு காய் நகர்த்தும் விஜய்