ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்.. தேடி வரும்படி வைத்த நக்கல் மன்னன்

80,90களில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர் தான் கவுண்டமணி. இவர் கொடுக்கும் ஒவ்வொரு கவுண்டருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் அளவிற்கு புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராக வந்தார். அதிலும் இவரும் செந்திலும் சேர்ந்து அடிக்கும் நையாண்டிக்கு அளவே கிடையாது. அதற்காகவே இவருக்கு நக்கல் மன்னன் என்ற பெயருடன் உலா வந்தார்.

அதற்காகத்தான் என்னமோ மற்ற நடிகர்களை மட்டும் மரியாதை இல்லாமல் யார் என்று கூட பார்க்காமல் தரை குறைவாக பேசி நடத்திருக்கிறார். ஆனால் இவருடைய நக்கல் தனமான பேச்சு படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் அதே மாதிரி கலாய்த்து பேசுறது பலருக்கும் பிடிக்கவில்லை. ஏன் ரஜினி கமலை கூட வச்சு பார்க்கவில்லை.

Also read: கமலிடம் தோற்றுப் போனதை ஏற்றுக் கொள்ளாத ரஜினி.. கொடுத்த அடியால் எழுந்திருக்க முடியாமல் போன உலக நாயகன்

அதாவது சூட்டிங் இல்லாத நேரத்தில் வாயா போயா டே போட்டு பேசுறது. இந்த மாதிரி தொடர்ந்து செய்ததால் ஒரு கட்டத்தில் இதை சகித்துக் கொள்ளாத ரஜினி மற்றும் கமல், இயக்குனர் தயாரிப்பாளர் இடம் இனிவரும் படங்களில் காமெடி ஷூட்டிங் தனியாக அவருக்கென்று வைத்து விடுங்கள் என்று கவுண்டமணியை ஒதுக்கி இருக்கிறார்கள். எங்களையும் அவருடன் சேர்த்து நடிக்க வைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.

அதன் பின் ஒரு சில படங்களில் அந்த மாதிரி அமைந்திருந்தாலும் கவுண்டமணியின் காமெடிக்கு அதிக அளவில் வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து இயக்குனர்களால் ரஜினி கேட்டுக் கொண்ட படி படப்பிடிப்பை வைக்க முடியவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் இயக்குனர், ரஜினி மற்றும் கமலிடம் கவுண்டமணி இல்லாமல் படம் எடுப்பது சாத்தியமில்லை என்று கூறுகிறார்.

Also read: கவுண்டமணி வில்லனாக மிரட்டிய 5 படங்கள்.. இன்றுவரை பிரபலமாக இருக்கும் ‘பத்தவச்சுட்டியே பரட்டை’ வசனம்

கமல் ஆவது பரவாயில்லை ரொம்பவும் கௌரவம் பார்க்காமல் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் ரஜினியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிறகு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கவுண்டமணி வந்தால் மட்டும் தான் படம் நன்றாக இருக்கும் என்பதால் இயக்குனர் ரஜினியிடம் போய் சொல்லி இருக்கிறார். பிறகு ரஜினி ஒரு வழியாக சம்மதித்த பிறகு இயக்குனர் கவுண்டமணியே தேடிப் பிடித்து படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்.

அதன்பின்பும் கவுண்டமணி போட்ட ஒரே கண்டிஷன் என்னால் மாற முடியாது நான் எப்படி பேசுவனோ அப்படித்தான் பேசுவேன் இதற்கு சம்மதம் என்றால் நான் நடிக்க வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட இயக்குனர் கவுண்டமணி சொன்னது எல்லாத்துக்கும் சரி என்று தலையாட்டி அதன் பின் ரஜினியுடன் நடிக்க வைத்த படம் தான் மன்னன். மற்றும் கமலுக்கு பேர் சொல்லும் பிள்ளை. இந்த படங்களில் கவுண்டமணி, படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் ரஜினி கமலை நல்ல வச்சு செய்து இருப்பார்.

Also read: தனுஷின் நிஜபெயர் என்ன தெரியுமா?. கமல் படத்தால் பெயரை மாற்றிக் கொண்ட நடிப்பு அசுரன்

Trending News