இயக்குனராக ரொம்பவே வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் இயக்குனர் மிஸ்கின். இவர் ஏற்கனவே நடிகராக அவதாரம் எடுத்தது மட்டுமல்லாமல் இப்போது லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய பேட்டிகள் எல்லாம் கொஞ்சம் சர்ச்சைக்குரியதாக இருக்கும்.
ஆனால் இவரே பிரமித்து பார்க்கக்கூடிய 3 நடிகர்களை பற்றி சமீபத்தில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது மட்டுமல்ல இந்த 3 நடிகர்களுக்கும் ஒன் லைன் ஸ்டோரி சொல்லி அவர்களை லாக் செய்து வைத்திருக்கிறார். மிஸ்கினை மிகவும் பிரமிக்க வைத்தவர் தான் உலக நாயகன் கமலஹாசன். இதை பல மேடையில் மிஸ்கின் வெளிப்படுத்தியுள்ளார்.
சந்தர்ப்பம் கிடைத்த போது கமலிடமும் இதை சொன்ன மிஸ்கின், அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் வித விதமான அவதாரங்களை எடுத்துக் கொண்டிருக்கும் கமலை வைத்து க்ரைம் திரில்லர் பாணியில் திரைக்கதையை அமைத்து, அதன் ஒரு வரியில் கதையை சொல்லி உலக நாயகன் இடம் ஓகே வாங்கி விட்டார்.
அடுத்ததாக கமலுக்கு பிறகு மிஸ்கினை கவர்ந்தவர் சியான் விக்ரம். தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் தன்னையே வருத்திக்கொண்டு மெனக்கெடக் கூடியவர் தான் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆதிவாசி போன்ற கெட்டப்பில் இருக்கும் தங்கலான் விக்ரமை பார்ப்பதற்கே பயமூட்டும் வகையில் இருக்கிறது. மிஸ்கினின் மனதில் பெஸ்ட் ஆக்டர் ஆக குடிகொண்டு இருக்கும் விக்ரமுக்கு வரலாற்றுப் பின்னணியில் ஒரு திரைக்கதை அமைத்து அதற்கான ஒன்லைன் ஸ்டோரியையும் சொல்லி இருக்கிறார்.
அது விக்ரமுக்கும் பிடித்துப் போக, கூடிய விரைவில் இவர்களது கூட்டணியில் ஒரு படம் தயாராக போகிறது. அடுத்ததாக மிஸ்கினை வியந்து பார்க்க வைத்த நடிகர் தான் தனுஷ். அசுரனாக தனுஷை பார்த்த மிஸ்கினுக்கு அவரை வைத்து சைக்கோ பாணியில் ஒரு படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார். இதற்கு தனுஷும் ஒத்துக்கொண்டு உள்ளாராம்.