வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

அக்கடதேசத்தில் அதிகம் விற்கப்பட்ட 5 படங்கள்.. இரண்டு இடங்களிலும் பட்டையை கிளப்பிய தளபதி

Actor Vijay:படம் வெளிவருவதற்கு முன்னரே அதனின் எதிர்பார்ப்பை கொண்டு பெரிதும் பேசப்பட்டு வெற்றி அடைந்து விடுகிறது. அதன் பின் தான் வசூல் ரீதியான வெற்றியை கணக்கெடுக்கப்படுகிறது. இவை அக்கட தேசத்திற்கும் பொருந்தக்கூடியவை.

தமிழில், தமிழ் படங்களுக்கு கிடைக்க கூடிய வெற்றியை விட அக்கடதேசத்தில் அதிக வரவேற்பு உண்டு. அவ்வாறு சமீப காலமாக தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் படங்களுக்கு கேரளா மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Also Read: குணசேகரனை மிஞ்சும் ஜீவானந்தம்.. எத்தனை பேர் தான் ஜனனி சமாளிக்கணுமோ

அதேபோன்று இங்கு வெளியான 2018 மலையாள படத்திற்கு தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. அவ்வாறு தமிழ் படங்கள் கேரளாவில் அதிகம் விற்கப்பட்ட 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

2022ல் பிரம்மாண்டமாய் வெளிவந்த உலக நாயகன் கமலஹாசனின் படம் தான் விக்ரம். இப்படம் தமிழ் ரசிகர்களை பூர்த்தி செய்தது அல்லாது, கேரளா விநியோகஸ்தருக்கு இப்படம் 7கோடிக்கு விற்கப்பட்டது. மேலும் இந்த பட்டியலில் இப்படம் ஐந்தாவது இடத்தை பிடித்து உள்ளது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் மெர்சல் படம் சுமார் 7.5 கோடிக்கு விற்கப்பட்டு நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: ரகசியமாக சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தை முடித்த வெற்றிமாறன்.. கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்து தான் ஆகணும்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டத்தின் படைப்பாய் வெளிவந்த பொன்னின் செல்வன் பாகம் 1மற்றும் 2 நல்ல விமர்சனங்களை பெற்றது. அதிலும் பொன்னின் செல்வன் 2 சுமார் 9 கோடிக்கு கேரளா விநியோகஸ்தருக்கு விற்கப்பட்டு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மலையாள படங்களில் மோகன்லால் படங்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவிற்கு ரஜினியின் படங்களுக்கும் எதிர்ப்பார்ப்பு அதிகம்.

அவ்வாறு ரஜினி நடிப்பில் வெளிவந்த 2.o படம் சுமார் 14 கோடிக்கு கேரளா விநியோகஸ்த உரிமம் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்படங்களை விட விஜய் படமான லியோ படம் வெளிவருவதற்கு முன்பே கேரளா விநியோகிஸ்த தரப்பில் உரிமமாக இப்படத்திற்கு சுமார் 16 கோடி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: லியோ வியாபாரத்தை துவம்சம் செய்த ஜெயிலர்.. எப்போதும் நான் தான் நம்பர் ஒன் என மீண்டும் நிரூபித்த ரஜினி

- Advertisement -spot_img

Trending News