Actor Kavin: பொதுவாக குடும்ப ஆடியன்ஸ் உள்ள ஹீரோக்களின் படங்களுக்கு தான் வசூல் பெரிய அளவில் கிடைக்கும். அவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகர் தளபதி விஜய். அந்த இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிவகார்த்திகேயன் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
ஒருமுறை விஜய் மேடையிலேயே சிவகார்த்திகேயன் குழந்தைகளின் மனதில் இடம் பிடித்துவிட்டார் என புகழ்ந்து பேசினார். இப்போது விஜய் டிவியின் மற்றொரு செல்லப் பிள்ளையான கவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போதே விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் இடத்தைப் பிடிக்க மெர்சல் கூட்டணி போட்டுள்ளார்.
சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் ஹீரோ மோகத்தால் படங்களில் கதாநாயகனாக நடிக்க சென்று விட்டனர். இதனால் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பெரிய நடிகர்களின் படங்களில் டாப் இசையமைப்பாளர்கள் இசை அமைப்பதால் படு பிசியாக இருந்து வருகிறார்கள்.
ஆனாலும் கவின் தன்னுடைய படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களுடன் கூட்டணி போடுகிறார். தளபதி விஜய் இப்போது அனிருத்துடன் இணைந்து லியோ படத்தில் பணியாற்றுகிறார். அதற்கு அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி போடுகிறார்.
அதேபோல் சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தில் யுவனுடன் கூட்டணி போட்ட நிலையில், டாக்டர் படத்தில் அனிருத் உடன் பணியாற்றி இருந்தார். அதேபோல் இப்போது கவின் நடித்து வரும் படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் இலனுடன் ஒரு படத்தில் கவின் இணைய இருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பதாக போஸ்டரும் வெளியாகி இருந்தது. ஆனால் சில காரணங்களினால் ஹரிஷ் கல்யாண் விலக தனுஷ் நடிப்பதாக கூறப்பட்டது. அப்போது கவின் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். ஆகையால் மிகக் குறுகிய காலத்திலேயே கவின் சினிமாவில் வளர்ச்சி அடைய இருக்கிறார்.