திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்ரம் படத்தின் இரண்டு முக்கிய கேரக்டர்களை லியோவில் இறக்கும் லோகேஷ்.. அப்போ LCU கன்பார்ம்

Actor Vijay: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாத ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தின் அடுத்தடுத்த படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 60 சதவீத வேலைகள் முடிந்து விட்டதாக லோகேஷ் கடந்த மாதமே அறிவித்திருந்தார். இறுதி கட்ட படப்பிடிப்பாக சண்டை காட்சிகள் மற்றும் ஒரு பிரம்மாண்ட பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது.

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு அவரின் படங்களின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தே ஆக வேண்டும் என்று நிலையில் தான் லோகேஷ் இருக்கிறார். இருந்தாலும் எந்த ஒரு அழுத்தத்தையும் தன் மீது எடுத்துக் கொள்ளாமல், முழுக்க முழுக்க அவருடைய பாணியிலேயே இந்த படம் உருவாகி வருகிறது.

Also Read:லியோ அப்டேட் வராததற்கு இதுதான் காரணமா?.. சர்ச்சையை ஏற்படுத்தும் சம்பவம்

ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன் என யாருமே எதிர்பார்க்காத கூட்டணியில் இந்த படம் உருவாவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் முந்தைய வெற்றி படமான விக்ரம் படத்தின் இரண்டு முக்கிய கேரக்டர்களை லியோவில் நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ். இந்த இரண்டு கேரக்டர்களுமே படம் ரிலீசான சமயத்தில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றவை.

விக்ரம் படத்தில் வந்த மிகப் பெரிய ட்விஸ்ட் கேரக்டர் ஏஜென்ட் டீனா. கமலஹாசன் வீட்டில் பணி பெண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்த கேரக்டர், ரவுடிகள் வீட்டை முற்றுகையிடும் பொழுது கையில் வைத்திருக்கும் வாக்கி டாக்கி கொண்டு தகவல் கொடுப்பதோடு அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபட்டு அவ்வளவு நேரம் படம் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரையும் மிரள செய்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:லியோ டைட்டிலால் விஜய்க்கு வந்த புது தலைவலி.. ஃப்ரீயா உருட்டுர விளம்பரமா இருக்கே!

மேலும் கமலஹாசனை பற்றி விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் அமர், தொடர்ந்து ஒரு விலைமாதுவின் வீட்டிற்கு செல்வார் என்ற தகவல் கேட்டு, அங்கு செல்லும் பொழுது அங்கிருக்கும் பெண்ணிடம் நடக்கும் விசாரணை மற்றும் அவர் கொடுக்கும் தகவல் படத்தின் மற்றொரு உச்சக்கட்ட டிவிஸ்ட் . தற்போது அந்த கேரக்டரில் நடித்த மாயாவும் லியோ படத்தில் இணைந்திருக்கிறார். சமீபத்தில் ரிலீசான படங்களில் அதிக கவனத்தை ஈர்த்த இந்த இரண்டு கேரக்டர்கள் லியோவில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

                                                              லியோ படத்தில் இணைந்த வசந்தி மற்றும் மாயா

Vikram movie characters
Vikram movie characters

விக்ரம் படத்தின் முக்கிய கேரக்டர்களான இந்த இரண்டு பேரும் லியோவில் இணைந்திருப்பது ஒரு வேளை இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே எழுப்பி இருக்கிறது. இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் லியோ படத்தில் வேறு ஏதாவது கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

Also Read:விஜய்யிடம் காரை பரிசாக வாங்க 4 பிரபலங்கள்.. ஓடாத படத்திற்கு இவ்வளவு பில்டப் தேவையா தளபதி

Trending News