உடல் எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமிமேனன்.. ட்ரெண்டாகும் கும்கி 2 பட நடிகை புகைப்படம்

Actress Lakshmi Menon: ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் ஓர்குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட ஹீரோயின்கள் ஏராளம். அவ்வாறு கும்கி பட நாயகி என்ற கதாபாத்திரம் மூலம் அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட இவர் பட வாய்ப்புக்காக மேற்கொள்ளும் முயற்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மலையாள படங்களின் மூலம் சப்போர்ட்டிங் ரோலில் இடம்பெற்றவர் தான் லட்சுமி மேனன். அதன்பின் தமிழில் பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சுந்தரபாண்டியன் இப்படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

அதே ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இணைந்து அசத்திய படம் தான் கும்கி. இந்த இரண்டு படங்களிலும் நடித்த இவர் சிறந்த கதாநாயகி விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பிரபலங்களான கார்த்தி, அஜித், விஜய் சேதுபதி, விஷால் போன்றவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

இருப்பினும் ஒரு சில படங்கள் அவருக்கு பெரிய விமர்சனங்களை பெற்று தராததால் சினிமாவிற்கு சற்று இடைவெளி விட்டு காணப்பட்ட இவர் தற்பொழுது தன்னுடைய ரீ பேக் போட்டோவை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார். தன் உடல் எடையை குறைப்பதில் முயற்சி எடுத்து வரும் இவர் அடுத்தக்கட்ட பட வாய்ப்புகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவ்வாறு அடையாளமே தெரியாமல் மாறி போய் உடல் ஃபிட்டாக வைத்து வருகிறார் லஷ்மி மேனன். ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்து இவர் பட வாய்ப்பு இழந்து காணப்பட்ட நிலையில் தற்பொழுது சந்திரமுகி 2 படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

உடல் எடையை குறைத்த லட்சுமி மேனன்

lakshmi-menon
lakshmi-menon

ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடிக்க இருக்கும் இவருக்கு இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தரும் எனவும், மேலும் இப்படம் சந்திரமுகி பாகம் ஒன்றில் நடித்த ஜோதிகாவுக்கு இணையாக இடம் பெறுவார் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்ப்பை முன்வைக்கின்றனர்.