Actor Kamalhassan: கமல் நடித்த படங்களை முன் உதாரணமாக வைத்து நிறையப் பேர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து களம் இறங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சில பேர் இயக்குனர்களாக மாறி ஜெயித்து வருகிறார்கள்.
அதில் லோகேஷ், கமலின் படங்களை பார்த்த பின்பு எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தினால் எப்படியாவது சினிமாவிற்குள் நுழைந்து விட வேண்டும் என்ற வெறியுடன் வந்தேன் என்று கூறியிருக்கிறார். இவரைப் போல கமலின் ரசிகனாக இருந்து அவருடைய படங்களைப் பார்த்ததினால் அவருக்குள் ஏற்பட்ட ஆர்வம் தான் அவரைத் தற்போது இயக்குனராக மாற்றி இருக்கிறது.
அதாவது கமல் நடிப்பில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு மற்றும் குருதிப்புனல் படங்களைப் பார்த்த பின்பு தான் இவர் இந்த மாதிரியான படங்களைப் எடுப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார். அதிலும் கமல் என்றால் வெறித்தனமான ரசிகராகவும், அதே நேரத்தில் கௌதம் எடுக்கக்கூடிய படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்திருக்கிறார்.
அதனால் படம் ரிலீஸ் ஆகும் முதல் நாளிலேயே ஸ்கூலை கட்டடித்து படம் பார்க்க சென்று இருக்கிறார். இப்படிப்பட்ட வெறித்தனமான ரசிகர் யார் என்றால் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா தான்.
இப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதைக்கு பின்னாடியும் கமல் படங்களில் பார்த்த காட்சிகள் தான். அவர் தான் எங்களுடைய இன்ஸ்பிரேஷன் என்றும் கூறி வருகிறார். ஏற்கனவே இப்படித்தான் லோகேஷும் என்னுடைய தலைவர் கமல், அவரின் தீவிரமான ரசிகர் என்றும் நான் இயக்குனர் ஆவதற்கு அவருடைய நடிப்பு மற்றும் படங்கள் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
அடுத்ததாக குட் நைட் படத்தின் ஹீரோ மணிகண்டா இவரும் இதே போல் தான் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இவரும் கூடிய விரைவில் இயக்குனராக களம் இறங்க இருக்கிறார். இவர்களை தொடர்ந்து இன்னும் பல ரசிகர்கள் இயக்குனராக படையெடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.