ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

வாயை பிளக்க வைத்த 2023 ஐபிஎல் வியாபாரம்.. சிந்தாம செதராம மொத்த கஜானாவையும் நிரப்பிய பிசிசிஐ

புதிது புதிதாய் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை உட்கார்ந்து யோசிப்பார்கள் போல். ஏற்கனவே இந்த கிரிக்கெட் போட்டியில் பணத்தை வாரி இறைக்கின்றனர். இந்திய நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கும் சம்பளம் பல கோடிகள். அதுமட்டுமின்றி அவர்கள் விளம்பரம், சமூக வலைத்தளம், விளையாட்டுப் போட்டி என பல நூறு கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.

வீரர்களை வைத்தும், கிரிக்கெட் ரசிகர்களை வைத்தும் இந்த பிசிசிஐ பல கோடிகள் காசு பார்க்கின்றனர். தற்போது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளை வைத்து பல்லாயிரம் கோடிகளை ஓரிரண்டு மாதங்களில் சம்பாதித்து விடுகிறார்கள். இந்த 2023 ஐபிஎல் போட்டிகளில் எந்தெந்த விதத்தில், எப்படி எல்லாம் சம்பாதித்துள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வழக்கம்போல் ஐபிஎல் போட்டியை குத்தகைக்கு எடுத்ததை போல் இரண்டு அணிகளே கோப்பையை வெல்லும். ஒன்று மும்பை அணி, மற்றொன்று சென்னை அணி இவ்விரு அணிகளுமே அதிக முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை தன்வசமாகியது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடத்தியதில் மொத்தம் 10,120 கோடிகள் வசூல் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் இந்த தொகை வசூல் ஆகியுள்ளது. இந்த மாதிரி விளையாட்டுப் போட்டிகளுக்கு நம் நாட்டில் வரி கிடையாது. இப்படி வரியில்லாமல் மொத்த காசையும் அப்படியே வாரி கஜானாவை நிரப்பியுள்ளது பிசிசிஐ.

இந்த போட்டி நடைபெறும் போது சேனல் மற்றும் ஓடிடி நடுவே ஒளிபரப்பப்படும் விளம்பரத்தினால் வந்த லாபம் மட்டும் 4700 கோடிகள். சென்ற ஆண்டை காட்டிலும் பல மடங்கு லாபத்தை இந்த ஆண்டு பெற்றுள்ளது. பிரான்சிசி எனப்படும் வணிக விற்பனை உரிமை 1450 கோடிகள்.

அதுமட்டுமின்றி பிசிசிஐக்கு கிட்டத்தட்ட 430 கோடியும், இதர வருமானம் என்ற கணக்கில் 740 கோடிகளும் வசூல் ஆகி இருக்கிறது. ஃபேண்டஸி கேம் எனப்படும் பங்குதாரர்கள் மூலம் 2800 கோடியும். வசூல் ஆகியுள்ளது மொத்தத்தில் 10,120 கோடிகளை வாரிக்குவித்துள்ளது பிசிசிஐ. இது இந்த ஆண்டு நிலவரம், இப்படி ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ பல்லாயிரம் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறது.

Trending News