வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டாப் 5 லிஸ்ட்ல இருக்கும் ஹீரோக்கள்.. மூன்றாவது இடத்தில் சிவகார்த்திகேயனா.? புதுசா உருட்டாதீங்க

Top 5 Tamil Actors: தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகர்களுள் யார் முதல் 5 இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்பதை பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் தன்னுடைய திரையுலக அனுபவத்தில் வைத்து அடித்து சொல்கிறார். அதிலும் அவர் மூன்றாவது இடம் சிவகார்த்திகேயனுக்கு என பொய்யான தகவலை பரப்புகின்றனர் எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்.

தற்போது கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா போன்ற மூன்று நடிகர்கள் தான் டாப் 3 இடத்தில் இருக்கின்றனர். ஆனால் இந்த மூன்றாவது இடத்திற்கு சூர்யாவிற்கு பதில் சிவகார்த்திகேயனை சொல்வது மிகவும் வருத்தமாக இருப்பதாக தனஞ்ஜெயன் கூறுகிறார். இரண்டு முறை தேசிய விருதை வாங்கிய தனஞ்செயன் தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.

Also Read: ரோலக்ஸ் மாதிரி அடுத்த ரத்தக் கலரியான ஹீரோவை களம் இறக்கிய லோகேஷ்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே

அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சூர்யாவை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காகவே அவருடைய இடத்திற்கு சிவகார்த்திகேயனை கொண்டு வந்து புதுசா ஒரு உருட்டு உருட்டுகிறார்கள். அதற்காக சிவகார்த்திகேயனை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. அவருக்கு வேண்டுமானால் 4-வது இடத்தை கொடுக்கலாம். ஆனால் 4-வது இடத்தில் கடுமையான போட்டியாளரான தனுஷ் இருக்கிறார்.

இதனால் சிவகார்த்திகேயனை வேண்டுமென்றே உயர்த்தி பிடிக்க வேண்டும் என சில ஊடகங்கள் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. ஆனால் உண்மையாகவே தமிழ் சினிமாவில் டாப் 3 என்றால் அது விஜய், அஜித், சூர்யா தான். இதில் யாருமே உள்ளே நுழைய முடியாது.

Also Read: மூணு வருஷத்துல விஜய்யை காலி செய்யணும்.. 4 பான் இந்தியா இயக்குனர்களுடன் கூட்டணி போடும் அஜித்

இப்போதும் விஜய், அஜித் போலவே சூர்யாவிற்கும் மிகப்பெரிய கிரஸ் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் அவருக்கு சரியான படங்கள் தான் அமைவதில்லை. நிச்சயம் பெரிய படம் மட்டும் அமைந்தால் டாப் 2 இடத்துக்கே டஃப் கொடுப்பார். அந்த அளவிற்கு மிகவும் திறமைசாலி தான் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி-யில் வெளியிடாமல் தியேட்டரில் வெளியிட்டு இருந்தால் அவர் யார் என்பதை காட்டி இருப்பார்.

தற்போது கங்குவா படம் தான் அவருடைய நடிப்பிற்கு தீனி போடும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த படம் நிச்சயம் சூர்யாவுடன் எந்த நடிகரையும் ஒப்பிட்டு பேசாத அளவுக்கு தனித்துவமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Also Read: விஜய்க்கு ஜோடி த்ரிஷா இல்லையா.? புரியாத புதிராக லியோ படத்தை மெருகேற்றும் லோகேஷ்

Trending News