வந்தியதேவனை ஓவர்டேக் செய்த அருள்மொழி வர்மன்.. 3 ஹீரோயின்களுடன் உருவாகும் அடுத்த படம்

Jayam Ravi: மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சூழலில் இப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தனர். மேலும் வந்திய தேவனாக நடிகர் கார்த்தி மற்றும் அருள்மொழி வர்மன் ஆக ஜெயம் ரவி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பெண்களை கவரும் கதாபாத்திரத்தில் வந்தியதேவனாக கார்த்தி தான் நடித்திருந்தார். ஆனால் அவரையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு இப்போது ஜெயம் ரவி தன்னுடைய அடுத்த படத்தில் மூன்று கதாநாயகிகளுடன் ஜோடி போட்டு நடிக்க இருக்கிறார்.

Also Read : தங்கையாக நடித்து பின் ஜோடி போட்ட 5 நடிகைகள்.. ஜெயம் ரவியை கண்ணசைவில் சுத்த விட்ட குந்தவை

அதற்கான பூஜை இப்போது போடப்பட்டிருக்கிறது. அதாவது ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் ஜெயம் ரவியின் ஜீனி படம் உருவாக இருக்கிறது. மிஷ்கின் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த புவனேஷ் அர்ஜுன் இப்படத்தை இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இப்போது ஜீனி படத்தில் தான் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். அதில் முதலாவதாக தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெற்று வரும் கீர்த்தி ஷெட்டி நடிக்க இருக்கிறார். இப்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Also Read : 23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி.. வொர்க் அவுட் ஆகுமா இந்த கெமிஸ்ட்ரி

அடுத்ததாக நடிகை கல்யாணி பிரியதர்ஷினி ஜெயம் ரவியுடன் ஜோடி போட இருக்கிறார். ஜீனி படத்தில் மூன்றாவது நாயகியாக வாமிகா கபி நடிக்கவிருக்கிறார். பாலிவுட்டில் பல படங்களில் நடித்த இவர் மாடர்ன் லவ் சென்னை என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இப்போது முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இவ்வாறு ஒரே படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, கீர்த்தி ஷெட்டி மற்றும் வாமிகா கபி ஆகியோர்கள் உடன் ஜெயம் ரவி ஜோடி போட்டு நடிக்கிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தொடர்ந்து இவருக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதன் மூலம் ஜெயம் ரவி தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கிறார்.

Also Read : தாறுமாறாக சம்பளத்தை கேட்ட ஜெயம் ரவி பட இயக்குனர்.. இதுக்கு ஐடி ரைடே பரவாயில்லை தலை தெறிக்க ஓடிய லைக்கா