1. Home
  2. கோலிவுட்

சிவகார்த்திகேயனால் கிடைத்த ஒரு வாய்ப்பும் போய்விட்டது.. கதறும் காமெடி நடிகர்

சிவகார்த்திகேயனால்  கிடைத்த ஒரு வாய்ப்பும்  போய்விட்டது.. கதறும் காமெடி நடிகர்
சிவகார்த்திகேயன் போன்று பலருக்கும் உதவும் உள்ளம் உடையவர் இப்படி அவரை இன்று வரை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட ஒரு நடிகர். இதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் அவர் சின்னத்திரையில் இருக்கும் பொழுது அவருக்கென்று பெண்கள் மற்றும் குழந்தைகள் என ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்தது. இதனால் அவரால் சினிமாவுக்குள் நுழையும் பொழுது ரொம்பவும் எளிதாக வெற்றியை எட்ட முடிந்தது.

சினிமாவில் தான் ஜெயித்தது மட்டுமல்லாமல் சினிமாவை மட்டுமே கனவாக கொண்ட தன்னுடைய கல்லூரி நண்பர்கள், மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பணிபுரியும் பொழுது அவருடன் இருந்தவர்கள் என நிறைய பேரை வளர்த்து விட்டிருக்கிறார். இன்று கோலிவுட்டில் அவருக்கு என்று தனி கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம். இப்படி உதவிய சிவகார்த்திகேயனால் வாய்ப்பை இழந்த காமெடி நடிகர் ஒருவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜின் பட்டறையில் இருந்து நிறைய காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறி இருக்கிறார்கள். அப்படி ஒரு நடிகர் தான் செம்புலி ஜெகன். பாக்யராஜின் ராசுக்குட்டி திரைப்படத்தில் இவர் நடித்த செம்புலி கேரக்டரை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்திற்கு பிறகு இவர் பாக்யராஜு உடனேயே தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அவருடைய சொக்கத்தங்கம் திரைப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றினார்.

அதன்பின்னர் பல வருடங்கள் கழித்து ஜெகனுக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்த போது அவர் தேர்ந்தெடுத்த ஹீரோ நடிகர் சிவகார்த்திகேயன் தான். சிவகார்த்திகேயன் அப்பொழுது தொலைக்காட்சிகளில் மட்டுமே பணியாற்றி வந்தார். தன்னுடைய நிச்சயதார்த்தம் நடந்த தினமே திருச்சியில் இருந்து காரில் சென்னைக்கு வந்து மேக்கப் டெஸ்ட் கூட எடுத்திருக்கிறார் சிவா. அதன் பின்னர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்திருக்கிறது.

15 நாட்கள் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த நிலையில், ஜெகனுடன் இருந்த ஒருவர் 35 லட்சம் ரூபாயை அவரை ஏமாற்றி கொண்டு சென்று விட்டாராம். அதன் பின்னர் திடீரென்று ஒரு நாள் சிவகார்த்திகேயனும் படப்பிடிப்புக்கு வரவே இல்லையாம் . இதனால் பாதி படபிடிப்பிலேயே அந்த படம் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு ஜெகனுக்கும் படங்கள் இயக்கம் வாய்ப்பு எதுவுமே கிடைக்கவில்லையாம்.

படம் பாதியில் நின்றது கூட மிகப் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் சிவகார்த்திகேயன் அந்த சம்பவத்திற்கு பிறகு இன்று வரை தன்னை தொடர்பு கொள்ளவே இல்லை என்று செம்புலி ஜெகன் மிகவும் வருத்தப்பட்டு கூறி இருக்கிறார். சில நேரங்களில் சூழ்நிலைகள் சரியில்லாத போது நடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்த படத்தில் இருந்து சொல்லாமல் விலகிக் கொள்வது என்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் சிவகார்த்திகேயன் போன்று பலருக்கும் உதவும் உள்ளம் உடையவர் இப்படி அவரை இன்று வரை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.