திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம்.. இவ்வளவுதானா?

Actor Sivakarthikeyan: சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் முக்கிய இடத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் தொடர் தோல்விகளை கொடுத்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் சுதாகரித்துக் கொண்டு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதன்படி டாக்டர் மற்றும் டான் படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியுற்றது. இப்போது சிவகார்த்திகேயனின் கைவசம் அயலான் மற்றும் மாவீரன் படங்கள் இருக்கிறது. இதில் மாவீரன் படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read : 3 வருட கேப், தளபதி இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் போட்ட பலே திட்டம்.. அதிரடியாக தொடங்கப்பட்ட SK21

யோகி பாபுவின் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும் வில்லனாக மிஷ்கினும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் மாவீரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. இப்போதைய காலகட்டத்தில் ரஜினி, விஜய், கமல் போன்ற பிரபலங்கள் 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்திற்கு கிட்டத்தட்ட 30 கோடி சம்பளமாக பெற்றிருந்தார்.

Also Read : சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்.. மிஷ்கின் பேச்சுக்கு ப்ளூ சட்டை பதில்

மேலும் மாவீரன் படத்திலும் அவரது சம்பளம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 25 கோடி மட்டுமே இப்படத்திற்கு சம்பளமாக சிவகார்த்திகேயன் பெற்றிருக்கிறாராம். ஏனென்றால் ரஜினி இதேபோன்றுதான் முந்தைய படங்கள் தோல்வி அடைந்தால் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வார்.

இப்போது சிவகார்த்திகேயனும் அதே பாணியை பின்பற்றி பிரின்ஸ் தோல்வியால் 5 கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது மாவீரன் படம் மட்டும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால் அவருடைய சம்பளம் இரட்டிப்பாக அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : சிவகார்த்திகேயன் ஒரு குட்டி ரஜினி.. மேடையில் சொம்படிக்கும் ரஜினி பட வில்லி

- Advertisement -

Trending News