Kamal Haasan – Sharmila: தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் தற்போது மிகப்பெரிய சென்சேஷனலாக இருப்பது ஓட்டுனர் ஷர்மிளா தான். கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுனர் என்று அடையாளப்படுத்தப்பட்ட இவர், சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடையே பரிட்சயமானார். நாடாளுமன்ற எம்.பி கனிமொழி இவருடைய பஸ்ஸில் பயணம் செய்ததும், அதன் பின்னர் இவருக்கு வேலை பறிபோனதும் அடுத்தடுத்து பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கும் மேல் இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் விதமாக அமைந்தது என்றால் அது நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் ஷர்மிளாவை அழைத்து கார் பரிசாக கொடுத்தது தான். ஒரு பக்கம் கமல் முன்பணம் மட்டுமே கொடுத்தார் என்று ஷர்மிளாவின் அப்பா கொடுத்த பேட்டி, மற்றொரு பக்கம் எதற்காக கமல் ஷர்மிளாவுக்கு மட்டும் இப்படி உதவ வேண்டும் என்ற விவாதங்கள் என கடந்த சில வாரங்களாகவே இந்த பிரச்சனை அனல் பறக்கும் விதமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஷர்மிளாவுக்கு பரிசாக கொடுக்கப்பட்ட கார் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. ஷர்மிளா அந்த காரை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த காரின் மாடல் மற்றும் விலை எவ்வளவு என்று நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். அந்த அளவுக்கு தற்போது இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிவிட்டது.
ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு உலகநாயகன் கமலஹாசன் மகேந்திரா நிறுவனத்தின் மராசோ என்னும் மாடல் காரை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த காரின் விலை 13 லட்சத்திலிருந்து 17 லட்சம் ஆகும். இந்த கார் முன்பணம் மட்டும் கொடுத்து வாங்க கொண்டிருக்கிறதா அல்லது மொத்த பணமும் கொடுக்கப்பட்டு விட்டதா என்பது சரியாக தெரியவில்லை. இப்போதைக்கு மகேந்திரா நிறுவனத்தால் இந்த கார் ஷர்மிளாவிடம் டெலிவரி செய்யப்பட்டு விட்டது.
ஷர்மிளா தன்னை ஒரு பெண் ஓட்டுனராக அடையாளப்படுத்திக் கொண்டதால், அவரைப் போலவே ஓட்டுனர் பணி செய்யும் நிறைய பெண்கள் தங்களுக்கு ஏன் இது போன்ற விளம்பரமும், அடையாளமும் கிடைக்கவில்லை என்று நிறைய பேட்டிகளில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் இது எல்லாம் ஷர்மிளாவின் வீண் விளம்பரம் என்றும், அவர் வேண்டுமென்றே அந்த வேலையில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்றும் பலர் சொல்லி வருகிறார்கள்.
ஷர்மிளாவுக்கு பரிசாக கொடுக்கப்பட்ட கார்

அதே போல் தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கும் பொழுது கமல், ஷர்மிளாவுக்கு மட்டும் ஏன் இப்படி செய்கிறார், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் கமல் அவருடைய தொகுதி மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கவே இப்படி செய்து கொண்டிருக்கிறார் என்றும் அரசியல் ரீதியாக தற்போது கமல் மீதும் விமர்சனம் எழுந்து வருகிறது. எது எப்படியோ ஷர்மிளா இனிமேலாவது வீண் விளம்பரங்களின் மீது நாட்டம் கொள்ளாமல் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் சரி.