செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நீங்கதான் வேணும், கமல் அடம் பிடித்துக் கூப்பிட்ட நடிகர்.. இந்தியன் 2வில் விவேக்கிற்கு பதில் இவர்தான்

Indian 2 movie: கமலஹாசன் நடிப்பில் பல வருடங்களாக எப்போது வெளியாகும் என காக்க வைத்திருக்கும் படம் தான் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் முக்கிய காட்சிகள் தவான் மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் படமாக்கப்பட்டு, இப்போது தலக்கோணத்தில் இந்தியன்2 படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் இளம் வயது கமல் சந்துருவின் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

Also Read: கமலுடன் இணைந்து நடிக்க முடியாமல் போன 5 நடிகர்கள்.. விவேக்கின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா ஷங்கர்

ஏற்கனவே இந்த படத்தில் நடித்த நடிகர்கள் இரண்டு பேர் இறந்து போய் விட்டனர். விவேக் மற்றும் நெடுமுடி வேணு இருவரும் இந்த படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது பாதியிலேயே பிரிந்து விட்டனர். இவர்களது மறைவு திரையுலகை மட்டுமல்ல ரசிகர்களையும் உலுக்கியது.

மேலும் விவேக் இந்தியன் 2 படத்தில் முக்கிய காமெடி நடிகராக கமிட்டான நிலையில் அவருக்கு பதில் யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படம் நீங்கள்தான் வந்து நடித்து தர வேண்டும் என கமலே வாண்ட்டராக ஒரு நடிகரை கூப்பிட்டு இருக்கிறார். அவர் ஏற்கனவே நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார்.

Also Read: ஈகோவில் மண்ணை கவ்விய வடிவேலு.. விவேக் உடன் காம்போவில் கலக்கிய 5 காமெடி படங்கள்

தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் இப்பொழுது விவேக்கிற்கு பதிலாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் மொழி படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ் ராஜ் தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்ட் செக்ரட்டரியாக வந்து, செம காமெடியாக நடித்திருப்பார்.

இவர் சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் மிக குறுகிய காலத்தில் நடித்த நடிகர் என்று கின்னஸிலும் சாதனை படைத்திருக்கிறார். இவர் இதற்கு முன்னர் கமல் கூப்பிட்டதால் சபாஷ் நாயுடு படத்திலும் நடித்தார், ஆனால் இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் கமல் சொல்லிய காரணத்தால் நட்பு ரீதியாக இந்தியன் 2 படத்தில் பிரம்மானந்தம் இணைவதற்கு ஒத்துக் கொண்டுள்ளார்.

Also Read: யாருக்கும் தெரியாத விவேக்கின் இறப்பிற்கு பின்னால் இருக்கும் காரணம்.. கோடி கோடியாய் சம்பாதித்தும் பிரயோஜனம் இல்ல

Trending News