Nayanthara: பொதுவாக திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்குள் தொழில் ரீதியான போட்டி இருக்கும். அப்படித்தான் இப்போது த்ரிஷா, நயன்தாரா இருவருக்கும் நீயா நானா என்கின்ற போட்டி இருக்கிறது. அதிலும் திரிஷா இப்போது நயன்தாராவை ஓவர் டேக் செய்யும் வகையில் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பிடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இப்போது அவருடைய மார்க்கெட்டை காலி செய்யும் வகையில் நயன்தாராவின் அட்டகாசமான கெட்டப் ஒன்று மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதாவது திருமணத்திற்கு பிறகு தற்போது பிசியாக நடித்து வரும் நயன்தாராவின் நடிப்பில் ஜவான் படம் வெளியாக இருக்கிறது.
அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் மாத வெளியிடாக வர இருக்கிறது. ஏற்கனவே இப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து இன்று படக்குழு வெளியிட்டுள்ள பிரிவியூ வீடியோவை பார்த்த பலரும் பட ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ட்ரெய்லர் வெளியாவதற்கு முன்பே இப்படி ஒரு முன்னோட்ட வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். செம மாஸ் ஆக தெறிக்கவிடும் சண்டைக் காட்சிகள் நிறைந்த அந்த வீடியோவில் நயன்தாராவின் என்ட்ரி தான் ரசிகர்களை மெர்சலாக்கி இருக்கிறது. அதாவது அஜித் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா படத்தில் நயன்தாரா கலக்கலான ஒரு கேரக்டரில் நடித்திருப்பார்.
மேலும் அப்படத்தில் அவர் ரொம்பவும் ஸ்டைலாக ஆக்சன் காட்சிகளிலும் பின்னி இருப்பார். கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு அதே போன்ற ஒரு கெட்டப்பில் ஜவான் படத்திலும் அவர் தோன்றி இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான். கருப்பு நிற உடையில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் நயன்தாராவை பார்த்து பலரும் அசந்து தான் போயிருக்கின்றனர்.
17 வருடம் கழித்து என்ட்ரி கொடுத்த நயன்தாரா

பில்லா படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த பிறகும் நயன்தாரா அதே போன்று இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த இரு படங்களில் இருக்கும் நயன்தாராவின் மாஸ் கெட்டப் போட்டோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.