சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சாக்லேட் பாய் ஹீரோவால் வந்த அந்தரங்க தொல்லை.. வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய சன் டிவி நடிகை

Sun Tv Actress: இப்போதெல்லாம் சீரியல் நடிகைகள் பெரிய திரையிலும் தங்கள் திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சில அந்தரங்க தொல்லைகள் ஏற்படுகிறது. அதை சிலர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலும் பல நடிகைகள் வெளியில் சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர்.

ஆனால் சன் டிவி சீரியல் நடிகை ஒருவர் சாக்லேட் பாய் ஹீரோ ஒருவரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி இருக்கிறார். அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் என்ற சீரியலில் நடித்து வருபவர் தான் ரிஹானா. இந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற பல சேனல்களிலும் இவர் நடித்து வருகிறார்.

Also read: நூதன முறையில் மோசடி வழக்கில் சிக்கிய மகாலட்சுமியின் கணவர்.. பிறந்தநாள் முடிந்த கையோடு ரவீந்தருக்கு கொடுத்த ஷாக்

மனதில் பட்டதை தைரியமாக பளிச்சென்று பேசக்கூடிய இவர் பல பேட்டிகளில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார. அதில் ஒரு பேட்டியில் இவர் பிரபல ஹீரோ ஒருவரை பற்றி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவர் ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அந்த ஹீரோ இவரை பார்த்து ஜொள்ளு விட்டதாக கூறியிருக்கிறார்.

அதாவது அந்த ஹீரோ இளம் பெண்கள் மனதில் சாக்லேட் பாயாக இருப்பவர். அது மட்டுமல்லாமல் அவருக்கு அதிக பிரபலம் இருக்கிறது. மிகப்பெரிய ஹீரோவான அவருக்கு நடிப்பு சுட்டு போட்டாலும் வரவில்லை. அவர் எப்படி இந்த உயரத்திற்கு வந்தார் என்பதுதான் தெரியவில்லை. அவருடன் ஒரு சீனில் நான் நடித்த போது அவர் பல டேக்குகள் வாங்கினார்.

Also read: குணசேகரனின் ஆட்டத்தை முறியடிக்கும் மருமகள்கள்.. ஜீவானந்தத்தால் மீண்டும் சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

ஆனால் நான் ஒரே டேக்கில் நடித்து முடித்து விட்டேன். அப்போது அந்த ஹீரோ என்னிடம் வந்து நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள். உங்கள் நம்பரை கொடுங்கள், அடுத்த படம் ஆரம்பிக்கும் போது கூப்பிடுகிறேன் என்று கேட்டதாக அவர் கூறியிருக்கிறார். அதை நம்பிய நடிகையும் தன் நம்பரை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு நடிகரிடம் இருந்து தேவையில்லாத மெசேஜ்கள் ரிஹானாவுக்கு வந்திருக்கிறது.

சில நாட்கள் பொறுமையாக இருந்த அவர் அதன் பிறகு அவருடைய நம்பரை பிளாக் செய்து விட்டதாக கூறியிருக்கிறார். அதனால் அந்த படத்தில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தை கூறிய அவர் ஹீரோவின் பெயரை மட்டும் கூறவில்லை. ஆனால் அவர் ஒரு அப்பாவி நடிகர் என்ற ஒரு க்ளூவை மட்டும் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு தைரியமாக பேசும் நீங்கள் ஏன் அந்த நடிகரை காட்டிக் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தாலும் அந்த நடிகர் யாராக இருக்கும் என்ற ஒரு விவாதமும் இப்போது கிளம்பி இருக்கிறது.

Also read: மூஞ்சிலயே தூக்கி எறிந்த பாக்கியா.. 2ம் பொண்டாட்டியுடன் தலைகுனிந்து வெளியேறிய கோபி அங்கிள்

Trending News