உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. விஜய்யை பார்த்து சிவகார்த்திகேயன் போட்ட பிளான்

Vijay-Sivakarthikeyan: புகழின் உச்சியில் இருக்கும் நடிகர்களுக்குள் எப்போதுமே தொழில் ரீதியான போட்டி இருந்து கொண்டே தான் இருக்கும். அதிலும் இப்போது பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் விஜய்யின் இடத்தை தட்டி பறிக்க வேண்டும் என்று பல நடிகர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.

அதில் சிவகார்த்திகேயன் ஒரு படி மேலே போய் அவரைப் போலவே அரசியல் களம் காணும் முடிவில் இருக்கிறாராம். விஜய்க்கு கடந்த சில வருடங்களாகவே அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இருந்து வருகிறது. அது அண்மைக்காலமாக வெளிப்படையாகவே தெரிகிறது.

அதைத்தொடர்ந்து தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக சில விஷயங்களை செய்து வருகிறார். அதன் முதல் படியாகவே அவர் மாணவ சந்திப்பை நிகழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதனால் விரைவில் அவர் கட்சியை ஆரம்பித்து செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனும் சத்தம் இல்லாமல் ஒரு விஷயத்தை செய்து வருகிறார். அதாவது நாடு முழுவதும் இருக்கும் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய வாழ்வு சிறப்பிக்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்த போகிறாராம்.

எப்படி என்றால் தன் ரசிகர்களுக்காக ஒரு தனி அமைப்பை உருவாக்கி வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும், படிப்பு செலவை ஏற்றுக் கொள்ளவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார். இது ஒரு வகையில் நல்ல விஷயமாக இருந்தாலும் இதன் மூலம் அவர் ஆதாயம் தேடுகிறாரா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் விஜய் தன் அரசியல் நகர்வுக்காக காய் நகர்த்தியது போல் சிவகார்த்திகேயனும் ஆரம்பித்து விட்டார் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதனால் விரைவில் இவருடைய அரசியல் வருகையை எதிர்பார்க்கலாம் என்கிறது திரையுலக வட்டாரம். இப்படி நடிப்பவர்கள் எல்லாம் கூண்டோடு அரசியலில் கால் பதித்தால் யாருக்குத்தான் ஓட்டு போடுவது என்று ரசிகர்கள் தற்போது புலம்பிய வண்ணம் உள்ளனர்.