Director Mysskin: இயக்குனர் மிஷ்கின் படங்கள் புரியாத புதிராகவும், வித்தியாசமான கதையுடனும் எடுக்கக்கூடியவர். அந்த வகையில் இவர் இயக்கிய படங்கள் ஆன சித்திரம் பேசுதடி, யுத்தம் செய், பிசாசு, சைக்கோ போன்ற பல படங்களை எடுத்து மக்களிடம் விமர்சன ரீதியாக பல பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.
அத்துடன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தியதால் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் மாவீரன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன் பொதுவாக இவருடைய பேச்சு எந்தவித ஒளிவு மறைவின்றி எதார்த்தமாக பேசக் கூடியவர்.
Also read: மிஷ்கின் சொன்னால் குட்டி போட்ட பூனை போல் பின்னால் வரும் விஜய் சேதுபதி.. மாவீரனில் செய்த உதவி
எந்தளவுக்கு எதார்த்தமானவரோ அதே அளவுக்கு அதிக கோபக்காரர் கூட. அந்த வகையில் நிறைய நடிகர்கள் மற்றும் இவருடன் பணியாற்றிய பல பேரை கோபப்பட்டு பேசியிருக்கிறார். அதனால் சினிமாவில் பல விஷயங்களை இழந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் சில நடிகர்களை வாடா போடா என்று மட்டு மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறார்.
அதில் விஜய் சேதுபதியை ஆரம்பத்தில் எப்படி கூப்பிட்டு பழகினாரோ அதே மாதிரி தான் தற்போது வரை ட்ரீட் பண்ணி வருகிறார். இதைப் பற்றி ஒரு முறை இவரிடம் கேட்டதற்கு இப்பொழுது வேண்டுமென்றால் விஜய் சேதுபதி பெரிய ஹீரோவாக இருக்கலாம். ஆனால் என்ன பொறுத்த வரை என்னுடைய தம்பி மாதிரி என்று கூறியிருக்கிறார்.
Also read: சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்.. மிஷ்கின் பேச்சுக்கு ப்ளூ சட்டை பதில்
மேலும் இதே மாதிரி விஷாலை பல இடங்களில் நேருக்கு நேர் மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறார். ஆனால் இதை இவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, எத்தனையோ முறை விஷால் சொல்லியும் கேட்காத மிஸ்கின் தொடர்ந்து அப்படியே பேசியதால் இவர்கள் இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்து சண்டையில் முடிந்திருக்கிறது.
இவர்களை மட்டும் இல்லாமல் ஜீவா, நரேன் மற்றும் பிரசன்னா இவர்களையும் அப்படித்தான் வாடா போடா என்று கூப்பிடுவார். அதிலும் பிரசன்னாவை அடித்து கூட பேசி இருக்கிறார். என்ன தான் நட்பு ரீதியாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் பேசி இருக்கலாம். ஆனால் மிஸ்கின் பொது இடங்களிலும் அப்படியே பேசிக் கொண்டு வருகிறார்.
Also read: 30 வருஷம் இந்த மனுசன அசைக்க முடியாது.. மிஷ்கின் பாராட்டிய அந்த இயக்குனர் யார் தெரியுமா?