திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தனுஷை விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன்.. இருக்கிறத விட்டு பறக்க ஆசைப்படும் சம்பவம்

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் இன்று பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக மாஸ் காட்டி கொண்டிருப்பதற்கு தனுஷ் ஒரு முக்கிய காரணம் என்பதை நம்மால் மறுக்க முடியாது. அதனாலேயே அவர் இப்போது பல விஷயங்களில் தனுஷை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தனுஷை ஓவர் டேக் செய்ய சிவகார்த்திகேயன் முயற்சிக்கிறார் என்றும் அவர் வழியை பின்பற்றுகிறார் என்றும் பல கருத்துக்கள் எழுந்து வருகிறது. அதில் லேட்டஸ்டாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தனுஷ் வழியில் சிவகார்த்திகேயனும் பாலிவுட் பக்கம் செல்ல போகிறாராம்.

Also read: கழுதை தேஞ்சு கட்டெறும்பாயிடுச்சு.. பணத்தாசையால் அதல பாதாளத்திற்கு சென்ற தனுஷ் பட ஹீரோயின்

தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்காக வெளிநாடு உள்ளிட்ட இடங்களுக்கு ப்ரமோஷனுக்காக சென்று வந்த சிவகார்த்திகேயன் இடைப்பட்ட கேப்பில் மும்பைக்கும் இரண்டு முறை விசிட் அடித்து வந்திருக்கிறார்.

அங்கு படங்களில் நடிப்பது குறித்து விவாதித்து வந்துள்ள இவர் எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய ஹிந்தி பட அறிவிப்பை வெளியிடலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஏற்கனவே இவர் தனுஷை பார்த்து தெலுங்கு பக்கம் சென்றார். அப்படி அவர் நடித்து வெளியான பிரின்ஸ் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

Also read: மாவீரன் இந்த படத்தின் காப்பியா.? தேவையில்லாமல் உளறி வாங்கி கட்டிக் கொண்ட ப்ளூ சட்டை

இந்நிலையில் அவர் பாலிவுட் ஆசையில் இறங்கி இருப்பது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என தெரியவில்லை. ஆனாலும் இதுதான் சிவகார்த்திகேயனின் அடுத்த டார்கெட். கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் அடுத்ததாக தன்னுடைய 50ஆவது படத்தில் பிஸியாகிவிட்டார்.

இதை அடுத்து மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் போட்டிக்கு வருவது போல் இருக்கிறது சிவகார்த்திகேயனின் செயல். அந்த வகையில் இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படும் இவரின் எண்ணம் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியா, தோல்வியா.? முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Trending News