ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அமெரிக்காவில் இருந்து வந்த திடீர் அழைப்பு.. அதிர்ச்சியில் உறைந்த ரோபோ சங்கர்

Robo Shankar: விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரோபோ ஷங்கர், அதன் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நேரத்திலேயே வெள்ளி திரையின் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

உடல் எடையை குறைத்து, தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரோபோ சங்கர் திடீரென ரொம்பவும் மெலிந்து இருந்தார். இது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நேரத்தில், அவருடைய குடும்பத்தினர் சார்பாக ரோபோ சமீப காலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையும் பெற்று வருவதாகவும், தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் நிறைய மீடியாக்களில் பேட்டிகள் கொடுத்தனர்.

Also Read:அட இந்தப் படத்தின் கதை தான் விக்ரம் திரைப்படமா?.. அட்லீயின் லிஸ்டில் சேர்ந்த லோகேஷ் கனகராஜ்

அதே நேரத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, தன்னுடைய காதலரை சமூக வலைத்தளத்தில் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் ஆவார். அதன்பின்னர் இந்திரஜாவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி ரசிகர்களால் எழுப்பப்பட்டது. இதுபோன்ற சமயத்தில் ரோபோ ஷங்கருக்கு அமெரிக்காவிலிருந்து வந்த போன் கால் ஒன்று தற்போது பயங்கர வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்தியன் 2 திரைப்படத்தின் வேலைக்காகவும், தன்னுடைய சொந்த வேலைக்காகவும் அமெரிக்கா சென்று இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் நடிகர் ரோபோ சங்கரை போனில் அழைத்து, உடல்நிலை பற்றி விசாரித்து இருக்கிறார். மேலும் இருவரும் ரொம்ப நேரம் போனில் உரையாடிய வீடியோ ஒன்று நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்தது. ரோபோ சங்கரை அழைத்து அவரது நலம் பற்றி விசாரித்த கமலஹாசனை பல ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Also Read:கமலஹாசன் மீது பயங்கர க்ரஷ்.. கதை கூட கேட்காமல் நடிக்க ஒத்துக் கொண்ட மாவீரன் பட நடிகை

உலகநாயகன் கமலஹாசனிடம் ரொம்பவும் சந்தோஷமாக பேசிய ரோபோ சங்கர், தன்னுடைய மகள் இந்திரஜா சங்கருக்கு இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதை கமல் நேரில் வந்து நடத்தி வைக்க வேண்டும் எனவும், கமல் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றால் தான் பிறவி பயனை அடைந்து விடுவேன் என்றும் ரொம்பவும் உருக்கமாக கமலிடம் பேசி இருக்கிறார்.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தளபதி விஜய்யின் பிகில் மற்றும் நடிகர் கார்த்தியின் விருமன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ரோபோ சங்கர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் தன்னுடைய மகளுக்கு சீக்கிரமாக திருமணம் செய்கிறார் என்ற செய்தியும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்திரஜாவின் திருமணம் காதல் திருமணம் என்றும், விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவருடைய முடிவு என்றும் ரோபோ சங்கர் சொல்லி இருக்கிறார்.

Also Read:78 வயசு வரை நடித்த ஜாம்பவான்.. 3 தலைமுறைகளை பார்த்த கமல் பட நடிகர்

Trending News