சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

வில்லனாக நடிக்க இத்தனை கோடியா.. விஜய் சேதுபதிக்கு வாரி வழங்கிய ஷாருக்கான்

Jawaan- Vijay Sethupathi: முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஹீரோ கேரக்டரில் நடிப்பவர்கள் ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டனர். ஆனால் தற்போது அந்த நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. ஒவ்வொரு பெரிய ஹீரோக்களின் படங்களும் ரிலீஸ் ஆகும்போது அதில் வில்லனாக யாரும் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாகிவிட்டது. இதை பல நடிகர்கள் தங்களுக்கு சாதகமாகவும் மாற்றிக் கொண்டுள்ளனர்.

அப்படி சமீப காலமாக இவர் நெகட்டிவ் ரோலில் நடித்தால் படம் கண்டிப்பாக ஹிட் ஆகிவிடும் என்று மக்கள் நினைப்பது நடிகர் விஜய் சேதுபதியை தான். ஹீரோவாக நடிக்கும் படங்கள் தரும் வரவேற்பை விட, விஜய் சேதுபதிக்கு இப்போதெல்லாம் நெகட்டிவ் கேரக்டர்களுக்கு தான் அதிக வரவேற்பு இருக்கிறது. அதிலும் விக்ரம் திரைப்படத்தில் இவர் நடித்த சந்தானம் கேரக்டர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

Also Read:அட இந்தப் படத்தின் கதை தான் விக்ரம் திரைப்படமா?.. அட்லீயின் லிஸ்டில் சேர்ந்த லோகேஷ் கனகராஜ்

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், தற்போது அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி, பட பிரமோஷன் வேலைகளும் தொடங்கி விட்டது.

ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே மற்றும் பிரியாமணி ஆகியோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் சம்பள தகவல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஜவான் திரைப்படம் ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

Also Read:மாவீரனை தூக்கி நிறுத்திய விஜய் சேதுபதி.. குரல் கொடுத்ததற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.!

ஒரு தயாரிப்பாளராக ஷாருக்கான் நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்பளத்தை கோடியில் வாரி வழங்கி இருக்கிறார். இந்த படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு 21 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக அவர் குறைந்த நாட்களே கால் சீட் கொடுத்திருந்தார். நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்கு தற்போது விஜய் சேதுபதிக்கு மவுசு அதிகம் ஆகிவிட்டது.

நடிகர் விஜய் சேதுபதியை பற்றி ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேட்ட கேள்விக்கு ஷாருக்கான் தான் பார்த்த நடிகர்களிலேயே சிறந்த நடிகர் விஜய் சேதுபதி என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் கேரக்டர் இந்த படத்தில் எப்படிப்பட்டதாய் இருக்கும் என ரசிகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read:அரை சதம் அடித்த விஜய் சேதுபதி.. மெகா கூட்டணி, டைட்டிலோடு வெளிவந்த 50வது பட போஸ்டர்

Trending News