புதன்கிழமை, ஜனவரி 1, 2025

மேடையிலேயே கண்கலங்கிய சிவகுமார்.. நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தலை குனிந்த கார்த்தி, சூர்யா

Actor Sivakumar: தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் சிவக்குமார். இவருக்கு பின்பு அவருடைய இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் கோலிவுட்டில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சிவக்குமார், மகன்களை மேடையில் வைத்துக்கொண்டே கண் கலங்கினார். இதை அவருடைய இரண்டு மகன்களும் பார்க்க முடியாமல் தலை குனிந்து வருத்தப்பட்டனர். சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 44-வது ஆண்டு நிகழ்வு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

Also Read: சூழ்நிலையை பொறுத்து உதவனும்.. சந்தடி சாக்கில் விஜய்யை சீண்டிய சூர்யா

இந்த விழாவில் தமிழகத்தில் இருக்கும் 12 ஆம் வகுப்பு ஏழை மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் விருதும் வழங்கப்பட்டது. அப்போது கலந்து கொண்டு பேசிய சிவக்குமார், குடும்ப சூழ்நிலையினால் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என அவருடைய சிறு வயது கதையை சொல்லி கண் கலங்கினார்.

சிவக்குமார் தன்னுடைய தந்தை கருப்பா சிவப்பா என்று கூட பார்த்ததில்லை. அவர் 10 மாத குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தந்தையை இறந்து விட்டார். அதன் பின்பு இவருக்கு 4 வயதில் இருக்கும்போதே குடும்ப பாரத்தை சுமக்க இருந்த அண்ணனும் 14 வயதில் பிளேக் நோயில் இறந்து விட்டார். அவர்கள் ஊரில் மழை பெய்யாததால் சோளம், ராகி என எந்த விளைச்சலுமே இல்லை.

Also Read: சூர்யா- ஜோதிகா காதலுக்கு உதவிய அஜித்தின் நண்பர்.. பல வருடத்திற்கு பின் லீக்கான சீக்ரெட்

ஆனால் எருக்கன் செடியும், அரளி செடியும் வளர்ந்து நின்றது. புருஷனும் போய்விட்டார், குடும்பத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய மகனும் இறந்துவிட்டார் என்ற விரத்தியில், அன்று என்னுடைய தாய் அரளிக்கொட்டையை அரைத்து எனக்கு கொடுத்திருந்தால் அன்றே கதை முடிந்திருக்கும். ஆனால் அந்த அப்பாவிமக அதை செய்யாமல் விட்டதால்தான் இன்று இங்கே நிற்கிறேன் என்று மேடையில் கண்கலங்கி அழுதார்.

இதை சிவக்குமார் அங்கிருக்கும் மாணவர்களுக்கு ஏழ்மை கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதை உணர்த்துவதற்காகவே பகிர்ந்து கொண்டார். ஆனால் அதே மேடையில் இருந்த சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தந்தை பட்ட கஷ்டத்தையும், அவர் கண்கலங்கி நிற்பதையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் அவர்களும் கண் கலங்கியபடி தலைகுனிந்து அந்த மேடையில் அமர்ந்திருந்தனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த அருண் விஜய்.. சூர்யாவின் முடிவால் அடித்த ஜாக்பாட்

Trending News