திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. மொத்த பெயரையும் சல்லி சல்லியா உடைச்சிட்டாங்களே

Actor Sivakarthikeyan: கடந்த வெள்ளிக்கிழமை சிவகார்த்திகேயன் நடிப்பில் உலகம் முழுவதும் மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் டாக்டர், டான் வரிசையில் 100 கோடியை குவித்து விடும் என சிவகார்த்திகேயன் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் இவருக்கென்று இருந்த பெயரை படக்குழு சல்லி சல்லியாக உடைத்தெறிந்துவிட்டது.

தமிழ் சினிமாவில் தற்சமயம் அடுத்த விஜய் என சிவகார்த்திகேயன் வளர்ச்சியை தான் ஒப்பிட்டு பேசுகின்றனர். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். அது மட்டுமல்ல விஜய்யின் படத்தில் இடம்பெறும் பாடல்களைப் போலவே சிவகார்த்திகேயன் படத்தில் இருக்கும் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும்.

Also Read: டாக்டர், டான் வரிசையில் இணைந்த மாவீரன்.. மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

அவருடைய படத்தில் இருக்கும் இரண்டு பாடல்களாவது இளசுகளை முணுமுணுக்க வைத்து விடுவார். ஆனால் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்த மாவீரன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எதுவும் மனதில் சுத்தமாகவே நிற்கவில்லை.

இந்த படத்தில் பீஜியமும் இல்லை, அதேபோல ரீ ரெகார்டிங்கும் சொல்லும் அளவுக்கு இல்லை. இந்தப் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வின் ஏற்கனவே அவர் இயக்கிய மண்டேலா படத்தின் இசையமைப்பாளரான பரத் சங்கரை தான் மறுபடியும் மாவீரன் படத்திலும் இசையமைப்பாளராக தேர்வு செய்திருந்தார்.

Also Read: லியோவை தொடர்ந்து தலைவர் 171ல் இணைந்த முக்கிய பிரபலம்.. தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் லோகேஷ்

வளர்ந்து வரும் இசையமைப்பாளரான பரத் சங்கருக்கு மாவீரன் திரைப்படம் ஒரு பொன்னான வாய்ப்பு. ஆனால் அந்த வாய்ப்பை பரத் சங்கர் சிறப்பாக பயன்படுத்தாமல், மேம்போக்காக அடித்துவிட்டு இருக்கிறார். பரத் சங்கருக்கு சரக்கே அவ்வளவு தானா என்றும் திரை விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி கிழித்து தொங்க விட்டு இருக்கிறார்.

ஏனென்றால் சிவகார்த்திகேயனின் படத்தில் இடம்பெறும் பாடல்கள் எல்லாம் பிச்சு உதறும். அப்படி இருக்கும்போது மாவீரன் படத்தில் படுமோசமாக இசையமைத்த பரத் சங்கர், இவ்வளவு நாள் சிவகார்த்திகேயனின் பாடல்களுக்கு என்று இருந்த மவுசை குறைத்து விட்டார். மொத்தத்தில் மாவீரன் பாடல்களில் கோட்டை விட்டது.

Also Read: வாரிசு பட வசூலை முறியடித்த மாவீரன்.. இரண்டு நாளில் தெறிக்க விட்ட சிவகார்த்திகேயன்

Trending News