சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கல்யாணத்திற்கு பின்னும் மவுசு குறையாத முத்தழகு.. ஒரு பாட்டுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா!

Actress Priyamani- Jawaan: தமிழில் இயக்குனர் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பின்னர் இயக்குனர் பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் திரைப்படத்தில் நடித்தார். முக்கிய இயக்குனர்கள் இருவரின் படங்களில் நடித்துமே இவருக்கு பெரிய வெற்றி ஏதும் கிடைக்கவில்லை. இயக்குனர் அமீர் இயக்கத்தின் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்த பிறகுதான் பிரியாமணிக்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளம் கிடைத்தது.

பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு பயங்கர பிசியான பிரியாமணி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்தார். ஆனால் அந்த மார்க்கெட் இவருக்கு கொஞ்ச காலம் தான் கை கொடுத்தது. ஒரு சில வருடங்களிலேயே மீண்டும் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனார் இவர். அதன் பின்னர் திருமணமும் செய்து கொண்டார்.

Also Read:நீலாம்பரியை பதம்பார்த்த குடும்ப இயக்குனர்.. மனைவிக்கு தெரிந்த கர்ப்பமான மேட்டர், அவசர திருமணம்

திருமணத்திற்கு பிறகும் பிரியாமணி சினிமாவை விட்டு ஒதுங்குவதாய் இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். இந்த நிலையில் இவர் இப்போது அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. நயன்தாரா ஹீரோயினாக இருக்கும் இந்த படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.

ஜவான் திரைப்படத்தில் பிரியாமணி ஒரு பாடலுக்கு மட்டும் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதற்கு பிரியாமணிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் தான் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. திண்ணையில் உட்கார்ந்து இருந்தவனுக்கு அடித்ததாம் அதிர்ஷ்டம் என்பது போல் ஜவான் மூலம் பிரியாமணிக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.

Also Read:16 வயதில் திருமணம், ரெண்டு கல்யாண வாழ்க்கையும் சோலி முடிந்த பரிதாபம்.. சரண்யாவுக்கு டஃப் கொடுக்கும் நடிகை

ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடுவதற்கு சம்பளமாக ஒரு கோடி வாங்கி இருக்கிறார் பிரியா மணி. இந்த பாடல் புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடல் காட்சிகளை விட பயங்கரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மார்க்கெட்டே இல்லாமல் இருந்த பிரியாமணிக்கு கோடிகளில் சம்பளம் கொடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஷாருக்கான்.

பிரியாமணிக்கு மட்டும் இல்லாமல் ஜவான் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற முக்கிய நடிகர்களின் சம்பள விவரமும் வெளியாகி இருக்கிறது. படத்தின் இயக்குனர் அட்லிக்கு 50 கோடி, ஹீரோ ஷாருக்கானுக்கு 100 கோடி, நடிகை நயன்தாராவுக்கு 10 கோடி மற்றும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு 21 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read:இளசுகளை கெடுத்து, மனதில் நஞ்சை பதிய வைத்த 5 படங்கள்.. பேரை கெடுத்துக் கொண்ட ஓவியா

Trending News