செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வேட்டையாடு விளையாடு போல ரீ-ரிலீஸ் செய்தால் பட்டைய கிளப்பும் கமலின் 5 படங்கள்.. ஆண்டவர் அல்டிமேட்

Actor kamal : ஐந்து வயது முதல் இன்று வரை தமிழ் திரை உலகில் அகராதியாக திகழ்பவர் உலக நாயகன் கமலஹாசன். பன்முக கலைஞரான கமல் இந்த வயதிலும் திரை உலகில் கடும் ஆக்டிவாக இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். அந்த வகையில் அவர் நடித்த நூற்றுக்கணக்கான படங்களில் சில படங்கள் இப்பொழுது ரீமேக் செய்தாலும் மக்கள் மத்தியில் மீண்டும் அதே வரவேற்பை பெறக் கூடியதாக 100% அமையும். அத்தகைய படங்களில் சில

காக்கிச்சட்டை : 1985இல் வெளியான அதிரடி ஆக்ஷ்ன் படம் காக்கி சட்டை. இயக்குனர் ராஜசேகரன் இயக்கத்தில் கமலஹாசன், அம்பிகா, மாதவி, சத்யராஜ் நடித்திருந்தனர். போலீசாக வேண்டும் என்று மெனக்கிடும் நாயகன் கமல். உதவியாக பக்கத்து வீட்டுப் பெண்ணான காதலி அம்பிகா, இருவரின் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் செமையாக இருக்கும். கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க காவல்துறையையே படிக்காதது போல் நடித்து உள்ளூர் ரவுடியாக மாறி கடத்தல் கும்பலை ஏமாற்றுவார் கமல்.

கடத்தல்காரான சத்யராஜுடன் கைகோர்த்து அவருக்கு உதவுவது போல் எல்லா பிளான்களையும் முறியடிப்பார் கமல். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் தட்டச் செய்யும். ஹிந்தி மொழியிலும் ரீமேக் ஆன இப்படத்தை தமிழில் மீண்டும் ரீமேக் செய்தாலும் அதே வரவேற்பு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Also Read : அப்பா, மகனுடன் ஜோடி போட்ட 2 நடிகைகள்.. 24 வயது வித்தியாசத்தில் நடித்த அம்பிகா

வெற்றி விழா : பிரதாப் போத்தன் இயக்கத்தில் சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் கமல், பிரபு, குஷ்பூ, அமலா, சசிகலா நடித்த படம் வெற்றி விழா. கொள்ளை கூட்டத்துக்குள் நம்பிக்கை கூறியவனாக சேர்ந்து பல சாகசங்களை செய்து ஜேம்ஸ் பாண்ட் மாதிரி கொள்ளையரின் வேலைகளை திசை திருப்பச் செய்வார் ரகசிய போலீஸ் ஆன கமல். அதை எப்படியோ தெரிந்து கொண்டு கொள்ளை கும்பல் அவர் மனைவி அமலாவை கொன்று கமலைக் கொள்ளும் போது கடலில் விழுந்து தப்பித்து விடுவார். தான் யார் என்று தெரியாமல் இருக்கும் கமல் சசிகலாவுடன் சென்னை சென்று பிரபு, குஷ்பூ உதவியோடு மீண்டும் கொள்ளை கும்பலை திணறவைத்து வெற்றி பெறுவார். படம் டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் அடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது என்றால் மிக ஆகாது

டிக் டிக் டிக் : 1981இல் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் மாதவி, ராதா நடித்த படம் டிக் டிக் டிக். வெளிநாட்டுக்கு செல்லும் மாடல் அழகிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுவார்கள். அந்த கொலைகளில் இருக்கும் ஒற்றுமை மற்றும் மோடிவ் என்ன என்பதை புகைப்படக்காரரான கமல் கண்டுபிடித்து விடுவார். தன் காதலி ஆன மாதவியையும் இதே முறையில் உடல் பாகங்களில் வைரங்களைக் கடத்திக் கொல்ல வரும்போது அவரைக் காப்பாற்றுவார் கமல். அந்த சமயத்தில் இப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வசூல் சாதனை இல்லை என்றாலும் அனேக மொழியில் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.

Also Read : ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பாரதிராஜாவின் 6 மறக்க முடியாத படங்கள்.. சப்பானியே ஒரே டயலாக்கில் தூக்கி சாப்பிட்ட பரட்டை

விக்ரம் : 1986 இல் அமரர் சுஜாதாவின் கதையில் கமல் திரைக்கதை அமைத்து இயக்குனர் ராஜசேகர் இயக்கிய படம் விக்ரம். ராக்கெட்டை கடத்திய கும்பலை கண்டுபிடிக்க நியமனம் ஆவார் போலீஸ் உயர் அதிகாரியான கமல். கம்ப்யூட்டர் இன்ஜினியரான லிஸி யின் உதவியோடு ராக்கெட்டை செயலிழக்க செய்ய சலாமியா நாட்டுக்கு செல்வார்.

சலாமியா நாட்டில் அந்த ராக்கெட்டை கண்டுபிடித்து அது கடல் பக்கம் திசை திருப்பி எதிரிகளின் சதியை முறியடிப்பார் கமல். ட்விங்கிள் கபாடியா, ஜனகராஜ், மனோரமா, ஷாருக்கான் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் ஒன்றி இருப்பார்கள். அடுத்தடுத்து காட்சிகளில் அன்றே புதுமைகளை திணித்து படத்தை சுவாரசியமாக கொண்டு செல்வார் கமல். இப்போது ரீமேக் செய்தாலும் செம அல்டிமேட் ஆக இருக்கும் ஒரே திரைப்படம் விக்ரம்.

தேவர் மகன் : 1992 ல் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் கதை திரைக்கதையை எழுதி இயக்குனர் பரதன் இயக்கிய படம் தேவர் மகன். நடிகர் திலகம் சிவாஜி, கமல், கௌதமி, ரேவதி, நாசர், வடிவேலு இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை தென் மாவட்டங்களில் நடைபெறும் பங்காளி சண்டையை கருவாக வைத்து எடுக்கப்பட்டது. படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் வசனங்களும் மண்ணின் மனம் மாறாமல் மிகச்சிறப்பாக அமைத்திருப்பார் கமல். சிவாஜியின் கம்பீரமும் கமலின் முற்போக்கு சிந்தனைகளும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருந்தது. பல விருதுகளை அள்ளிச் சென்ற இப்படத்தை இன்று ரீமேக் செய்தாலும் அடித்துக் கொள்ள ஒரு தமிழ் படமும் கிடையாது என்பது உண்மை.

Also Read : கௌதமி கமலுடன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. துணிச்சலுடன் சர்வ சாதாரணமாக நடித்த அந்தப் படம்

Trending News