1. Home
  2. கோலிவுட்

பிசிறு தட்டாமல் ரஜினியை பாலோ செய்யும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் பட தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்

பிசிறு தட்டாமல் ரஜினியை பாலோ செய்யும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் பட தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இடத்தைப் பிடிப்பதற்கு விஜய்யை விட மும்முரம் காட்டும் சிவகார்த்திகேயன்.

Actor Sivakarthikeyan: கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசக்கூடிய டாப்பிக் என்னவென்றால், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தான். இதற்கு ரஜினி தனது ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடலிலேயே பதில் சொல்லிவிட்டார். இருப்பினும் சிவகார்த்திகேயன் ரஜினியை பிசிறு தட்டாமல் பாலோ செய்து வருகிறார்.

இந்த ரகசியத்தை அப்பட்டமாக மாவீரன் பட தயாரிப்பாளர் போட்டு உடைத்து இருக்கிறார். ரஜினிக்கு அடுத்து விஜய் தான் என கூறிவந்த நிலையில் மிகவும் சைலண்டாக அந்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்து வருகிறார்.

அவரது தோற்றம், பேச்சு, நடிப்பு, காமெடி கலந்த நடிப்பு அனைத்தும் ரஜினியை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் உண்மையிலேயே ரஜினி படங்கள் தோல்வியடைந்தால் அதற்கு நஷ்ட ஈடாக தன் பணத்தை கொடுப்பார், அதுவும் அதை பாபா படத்தில் தான் செய்தார்.

சிவகார்த்திகேயன் அந்த அளவுக்கு வளர்ச்சி அடையாமலேயே சின்ன வயதிலேயே தோல்வி அடைந்த படத்துக்கு நஷ்ட ஈட்டை திருப்பி கொடுத்து இருக்கிறார், அந்த படம் தான் பிரின்ஸ். மாவீரனும் தோல்வி அடைந்தால் அதற்கு நஷ்ட ஈடு கொடுப்பேன் என கூறி வந்தார். ஆனால் இப்போது மாவீரன் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது.

6 நாட்களில் உலக அளவில் 55 கோடியை அசால்டாக தட்டி தூக்கி உள்ளது. சிவகார்த்திகேயன் சொன்னது போலவே ஹிட் கொடுத்தும் விட்டார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் அருண் விஷ்வா சிவகார்த்திகேயனை பற்றி இப்போது புகழ்ந்து பேசி உள்ளார்.

ரஜினிக்கு அடுத்து வேற எந்த ஹீரோவும் தனது நஷ்டத்தை ஒப்புக்கொண்டு பணத்தை திருப்பிக் கொடுத்தது கிடையாது. அந்த இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்பி இருக்கிறார். இவருக்கு இருக்கும் கடன் அனைத்தும், இது மாதிரி தன் படத்தில் ஏற்பட்ட நஷ்ட ஈடாக கொடுத்ததன் வாயிலாக தான் வந்தது என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.