திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

குடி மட்டும் தான் வாழ்க்கை என இருந்த 5 நடிகர்கள்.. மீண்டும் சூப்பர் ஸ்டார் போல் வெற்றி பெற்ற பிரபலங்கள்

Super Star Rajinikanth: நடிகர்களில் சிலர் சினிமாவுக்கு வந்த பிறகு அதிக குடி பழக்கத்தால் தங்கள் பெயரை கெடுத்துக் கொள்வதோடு, சினிமா வாய்ப்புகளையும் இழந்து இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால் ஒரு சிலரோ சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்டு மது பழக்கத்தை கைவிட்டு சினிமாவில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இந்த ஆறு நடிகர்கள் முதலில் மதுப்பழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பின்னர் சரியான நேரத்தில் அதை விட்டுவிட்டு சினிமாவில் ஜெயித்தவர்கள்.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருக்கு குடிப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் என எல்லாமே இருந்தது என அவரே ரசிகர்களிடம் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். பில்லா திரைப்படத்தின் போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இப்படியே போனால் சினிமா வாழ்க்கை கந்தலாகிவிடும் என்பதை புரிந்து கொண்டு அந்த பழக்கத்தை நிறுத்திக் கொண்டார். அதன் பின்னர் இந்த மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார்.

Also Read: ஹுக்கும் பாடல் சர்ச்சை, ரஜினியை பார்த்து வளர்ந்த பையன் விஜய்.. அவருக்கு வேற வேலை இல்லையா, வெளுத்து வாங்கிய பிரபலம்

விஜய் சேதுபதி: பல வருடங்களாக கஷ்டப்பட்டு சினிமாவில் ஹீரோ வாய்ப்பை பெற்றவர் விஜய் சேதுபதி. அதன் பின்னர் பெயர் மற்றும் புகழ் கிடைத்தவுடன் அவரும் குடிப்பழக்கத்திற்கு பழகி இருந்தார். பின்னர் நிலைமையை புரிந்து கொண்டு அந்த பழக்கத்தை விட்ட பிறகு இன்று தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட் வரை ஹீரோவாகி இருக்கிறார்.

சிம்பு: சினிமாவில் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சிம்பு அதன் பின்னர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி உடல் எடை அதிகம் கூடினார். இனி சிம்பு அவ்வளவுதான் என ஒட்டுமொத்த சினிமா உலகமும் கட்டம் கட்டிய போது, ஒரே வருடத்தில் 30 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து, தற்போது மீண்டும் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

Also Read:தனியாக தலைவர் மாலத்தீவு சென்றதன் ரகசியம்.. 2 படங்கள் முடித்தும் நிம்மதி இல்லாத பொழப்பு

ஜெய்: எங்கேயும் எப்போதும் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்களில் ஒருவர் ஜெய். ஆனால் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தார். தற்போது சினிமா தான் முக்கியம் என மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் ஜெய், தளபதி 68 படத்திலும் நடிக்க இருக்கிறார்.

விமல்: களவாணி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற விமல், சிவகார்த்திகேயன் வளர்ந்து வந்த நேரத்திலேயே இவரும் வெற்றி ஹீரோவாக இருந்தார். அவருடைய ரேஞ்சுக்கு வரவேண்டிய விமல் குடிப்பழக்கத்தால் சில காலம் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தார். தற்போது மீண்டும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Also Read:நான் யானை இல்ல குதிரை! சூப்பர் ஸ்டார் சொன்ன வார்த்தை.. நெல்சனை வைத்து தலைவர் ஆடும் ஆடு புலி ஆட்டம்

Trending News