வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எனக்கும் அந்த வில்லனுக்கும் போட்டியா?. வெற்றி கண்ட பின் நாசுக்காய் மேடையில் சோப்பு போட்டு வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்

Actor SivaKarthikeyan: பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயன் அவ்வளவு தான் மார்க்கெட் இழந்து போச்சு என இருந்த நிலையில், கம் பேக்காய் பார்க்கப்பட்ட படம் தான் மாவீரன். இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன் தன் அடுத்த வாய்ப்புக்காக சோப்பு போட்ட சம்பவம் குறித்த தகவல்களை இங்கு காண்போம்.

சமீபத்தில் திரையில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் படம் தான் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, யோகி பாபு, மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கோழையாக இருக்கும் சத்யா, மாவீரனாய் மாறும் கதையாய் இப்படத்தில் அமைந்திருக்கும்.

Also Read: கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் முத்தக் காட்சியில் அதிக நெருக்கம் காட்டிய நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சுமார் 5 நாட்களில் 50 கோடி வசூலை கண்டது. இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் நடிப்பினை சிறப்புற காட்டியிருப்பார்கள்.

மேலும் சிவகார்த்திகேயனுக்கு இப்படத்தில் விஜய் சேதுபதி தான் வாய்ஸ் கொடுத்திருப்பார். இதை குறித்து மடோன் அஸ்வின், விஜய் சேதுபதியிடம் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இவரின் குரல் படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்தது.

Also Read: 5 சரித்திர கதாபாத்திரங்களாக திரையில் வாழ்ந்த சிவாஜி.. மெய் சிலிர்க்க வைத்த கட்டபொம்மனின் வசனங்கள்

தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இப்படம் குறித்து வெற்றி விழா கொண்டாடி வரும் சிவகார்த்திகேயன், நன்றி பாராட்டும் விதமாய் மேடையில் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளினார். மேலும் அவருக்கும், எனக்கும் எந்த ஈகோவும் இல்லை. தற்பொழுது என் படத்தில் குரல் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

மேலும் இவரும் நானும் இணைந்த ஒரு படம் நடிக்க விருப்பப்படுவதாக கூறினார். அவை கூடிய விரைவில் நிறைவேறும் எனவும் நாசுக்காய் விஜய் சேதுபதியுடன் வாய்ப்பு கேட்டார் சிவகார்த்திகேயன். பாலிவுட்டில் வில்லனாய் முன்னேறி சென்ற விஜய் சேதுபதியிடம், வாய்ப்பு கேட்க இப்படியும் புகழலாமா என சினிமா வட்டாரங்கள் பேசி வருகிறது.

Also Read: சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பாக்யா.. சரியான நேரத்தில் என்ட்ரி கொடுக்கும் பழனிச்சாமி

Trending News